Saturday, May 28, 2005

L-RAMP நடத்தும் கண்டுபிடிப்புகளுக்கான போட்டி.

===================================
Update:-
இந்தப் போட்டிக்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வெற்றி பெற்றவர்கள்

செய்தி

===================================


L-RAMP (Lemelson Recognition and Mentoring Programme) என்ற அமைப்பு, கண்டு பிடிப்பாளர்களுக்கான ஒரு போட்டியை நடத்துகிறது.

சும்மா கண்டுபிடிப்புன்னா? எந்த மாதிரி கண்டுபிடிப்பு?

அதாவது, இந்த அமைப்பு, இந்தியாவில் இருக்கும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்தல், அடிப்படை ப்ரச்சினைகளை தீர்த்தல் இவைகளை நோக்கி செயல்படறதால, உங்க கண்டுபிடுப்பு அல்லது ஐடியா எப்டி இருக்க்ணும்னா, மனிதனின் அடிப்படைத் தேவைகளான, குடிநீர், உணவு, ஆரோக்கியம், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், இருப்பிடம் மற்றும் எரிசக்தி போன்ற துறைகளில் ஏதாவது ஒன்றில் குறிப்பிடத் தக்க முன்னேற்றம் கொண்டு வருவதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.

இந்த போட்டிய யாரு நடத்துறாங்க?

இந்த போட்டியின் பெயர், "L-RAMP Innovators Award". இந்த L-RAMP அமைப்பை கீழ்க்கண்ட மூன்று நிறுவனங்கள் கூட்டாக நடத்துகின்றன.

1. இந்திய தொழில்நுட்ப கழகம் சென்னை. (IIT Madras)
2. RIN (ரூரல் இன்னொவேஷன்ஸ் நெட்நொர்க்)
3. Lemelson Foundation.

இதுல கலந்துக்க என்ன பண்ணணும்?

கீழ்காணும் சமாச்சாரங்களை அவங்களுக்கு அனுப்பணும்.

1. உங்க கண்டுபிடிப்பின் புகைப்படம். அல்லது, உங்க ஐடியாவின் வரைபடம்.
2. கீழ்காணும் கேள்விகளுக்கு தமிழ் அல்லது ஆங்கிலத்தில் உங்களின் பதில்.

அ. உங்கள் கண்டுபிடிப்பு எந்த வகையில் வித்தியாசமானது?
ஆ. உங்கள் கண்டுபிடிப்பினால் சமுதாயத்திற்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் என்னென்ன?
இ. உங்கள் கண்டுபிடிப்பிற்கான உங்கள் எதிர்காலத் திட்டம்.

சரி, இதெல்லாம் எங்க அனுப்பணும்?

இந்தப் போட்டிக்கு விண்ணப்பங்கள் அனுப்ப இறுதி நாள் ஜூன் 10.

அனுப்ப வேண்டிய முகவரி மற்றும் மேல்விவரம் இங்க இருக்கு. (ஆங்கிலத்தில்)

பரிசுத் தொகை?

மொத்தம் ஒன்றரை லட்சம். 10 கண்டுபிடிப்பாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

அதுமட்டும் இல்லை.

தகுதி பெற்ற கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்வதற்கான பண உதவி அளிப்பதோடு மட்டுமில்லாமல், அதை வைத்து அவங்க தொழில் துவங்கவும் தேவையான கைடன்ஸும் குடுப்பாங்க.

மேலும்,

L-RAMP நடத்தும் தேசிய அளவிலான பட்டறையில் கலந்து கொள்ள வாய்ப்பு.

மற்றும், L-RAMP நடத்தும் ஸெமினார்களில் உங்கள் கண்டுபிடிப்பைப் பற்றி உரையாற்ற வாய்ப்பு.

மேலதிக விவரம்?

தொலைபேசி: 044-22578389
மின்னஞ்சல்: info@lramp.org
வலை: http://www.lramp.org/

===
மேல் வாசிப்பிற்கு

ரீடிஃப்
ஒன்லி புஞ்சாப்
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, May 27, 2005

ஆட்டோ வாங்க லோன்

தமிழக அரசு ஆட்டோ வாங்க லோன் தருதாம். நல்ல சேதி தான்.

அரசாங்கக் கடன்ல ஆட்டோ வாங்கி ஓட்டுறவங்க, கண்டிப்பா மீட்டர் போடணும்னு உத்தரவு போடுவாங்களா?
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, May 26, 2005

Customer Support : மார்க் ஸ்பீக்கிங்

லேப்டாப் வாங்கி நான்கு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. அதனுடன் வந்த ஆன்ட்டி வைரஸ் மென்பொருளின் trial period முடிந்து விட்டது. அதனால், இரண்டு நாள் முன்பாக அலுவலக தளத்திலிருந்து Symantec ஆன்ட்டி வைரஸ் தரவிரக்கம் செய்தேன்.

வந்தது வினை.

லேப்டாப்புடன் வந்த நார்ட்டன் ஆன்ட்டி வைரஸ் மென்பொருளும், புதிதாக install செய்த Symantec க்கும், முட்டி மோதி, ஒன்றையும் வேலை செய்ய விடாமல் செய்து விட்டன. Browser கூட திறக்கமுடியவில்லை. எவ்வளவோ முயன்றும், இவைகளை uninstall செய்ய முடியவில்லை.

விதியை நொந்துகொண்டு, நேற்றிரவு, Compaq support ஐ விளித்தேன். எடுத்தவர் மார்க் என்ற புனைப்பெயரில் பேசினார். இந்தியாவுக்குத் தான் அழைப்பு செல்லும் என்று தெரியும்.

படிப்படியாக உதவிக்கொண்டிருந்தார்.

நார்ட்டன் ஆன்ட்டி வைரஸ் uninstall ஆக நிறைய நேரம் பிடித்தது. காத்திருந்த நேரத்தில், மார்க் என்னைப்பற்றி குசலம் விசாரித்துக் கொண்டிருந்தார். 'இந்தியாவில் நீங்கள் எந்தப்பகுதியைச் சேர்ந்தவர்?' 'எந்தக் கல்லூரியில் படித்தீர்கள்?' 'அங்கு என்ன வேலை செய்து கொண்டிருக்கிறீகள்?' 'எவ்வளவு வருடமாக அங்கு இருக்கிறீர்கள்?' என்றெல்லாம் கெட்டுக் கொண்டிருந்தார். ( இந்தியர் என்ற பாசத்தில் detailed ஆகக் கேட்டுக் கொண்டிருந்தார் போலும்.)

'நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்?' என்றேன்.
'சென்னை'.
'டைடல் பார்க்கிலா?'
'இல்லை. வேளச்சேரி'.

கண்டிப்பாக தமிழராகத் தானிருப்பார். தமிழில் பேசலாமா என்றெண்ணினேன். ஆனாலும் ஆங்கிலத்திலேயே தொடர்ந்து கொண்டிருந்தேன். 'மார்க்' என்று கூறினாரே? அதனாலோ? அவரது புனை முகத்தை கடந்து உள்ளே செல்ல வேண்டாமென்று என் உள்மனம் எண்ணி விட்டதோ என்னமோ?

நார்ட்டனை வெளியேற்றியாகி விட்டது. நன்றி கூறி விடைபெற்றேன்.

ஆனாலும், மார்க் வாக்கியத்துக்கு வாக்கியம் 'ஸார்' போட்டது உறுத்தியது. இங்கு Customer Support ல் யாரும் 'ஸார்' போடுவதாகத் தெரியவில்லை.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, May 23, 2005

தமிழக இளைஞர்களில் பொது அறிவு: அந்துமணி's take.

தினமலர் - வாரமலர் - மே 22 இதழ் - பா.கே.ப பகுதியில், அந்துமணி எழுதியிருப்பதை அப்படியே கீழே கொடுத்திருக்கிறேன்.

Copyright Dinamalar

Copyright விதி மீறல் இருந்தால் யாராவது சொல்லுங்கள். பதிவை எடுத்து விட்டு, லிங்க் மட்டும் கொடுக்கிறேன்.

============
நமது இதழில் பயிற்சி அளிப்பதற்காக, தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடந்தது. இதற்கென, சென்னையிலிருந்து மூத்த செய்தி ஆசிரியர்கள் பல்வேறு நகரங்களுக்குச் சென்றனர். தேர்வு நடத்தி திரும்பிய சிலருடன் பேசிக் கொண்டிருந்தேன்.
கோவையில் தேர்வு நடத்தி, திரும்பி இருந்த பெண் உதவி ஆசிரியை கூறினார்:

"ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்து விட்டது. எந்த கல்வித் தகுதி வேண்டும் என்று குறிப்பிட்டு விளம்பரப்படுத்தி இருந்தோம்; இருப்பினும், பல வகையான கல்வித் தகுதிகளுடன் விண்ணப்பங்கள் குவிந்தன.

"விண்ணப்பத்தைப் படித்துப் பார்த்தால், அந்தச் சாதனை, இந்தச் சாதனை என்று பட்டியல் நீள்கிறது. ஏராளமான பட்டங்கள், சான்றிதழ்களும் சேர்க்கப் பட்டு விண்ணப்பங்கள் வந்தன.

"இவர்களுக்கு வைத்த எழுத்துத் தேர்வு தாட்களைப் பார்த்த எனக்கு கண்ணீரே வந்துவிட்டது... ஆங்கில மொழியோ, தமிழ் மொழியோ... ஒரு வரி விடையில் கூட எழுத்துப் பிழை இல்லாமலில்லை. குறிப்பாக, பொது அறிவுக் கேள்விகளுக்கு, எந்த பட்டப் படிப்பு படித்தவர்களுக்கும் பதிலே தெரிவதில்லை.

"படிப்பறிவு மிக்க நகரங்களில் கூட இதே நிலை தான். "தியரட்டிகல்' அறிவை வைத்துக் கொண்டு, ஆகாயக் கோட்டை கட்டும் நிலை தான் உள்ளது. அன்றாட வாழ்வுக்குத் தேவையான தகவல்களை அறிந்து கொள்ளும் ஆர்வமோ, பொது அறிவை வளர்த்துக் கொள்ளும் ஆவலோ எதிர்கால சந்ததியினருக்கு இல்லை; சினிமா சம்பந்தப்பட்ட தகவல்களை மட்டும் சுடச்சுட 'அப்டேட்' செய்து கொள்கின்றனர் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. 'இந்தியாவில் உள்ள பெண் முதல்வர்கள் யார் யார்?' என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை. 'பிரைடு அண்டு பிரிஜுடைஸ்' படத்தில் நடித்த இந்திய நடிகை யார்?' என்ற கேள்விக்கு ஒட்டுமொத்தமாய் அனைவரும் சரியான பதிலளித்திருந்தனர்.

"பொது அறிவை வளர்த்துக் கொள்வதில் ஆண்கள் சற்று ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், சுற்றி நடக்கும் விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. பெண்களிடம் பொது அறிவு மிக, மிகக் குறைவாகவே உள்ளது. படிப்பில் சூரப் புலிகளாய் விளங்கினாலும், தினசரி நடப்புகளை அறிந்து கொள்ள ஒரு சதவீதம் கூட ஆர்வம் காட்டு வதில்லை. கல்விச் சான்றிதழே தெய்வம் என்று இருக்கின்றனர்.

"தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. எல்.கே.ஜி., முதல் துவங்கி, இளநிலை பட்டப் படிப்பு வரை 17 ஆண்டுகள் இந்த இரு மொழி களையும் படித்து வெளியேறுபவர் களுக்கு இந்த இரு மொழிகளிலுமே அடிப்படைத் தவறே இல்லாமல் எழுதத் தெரியாமல் போவதற்கு காரணம் யார் என்று தெரிய வில்லை...' என்றார்!

மதுரையில் தேர்வு முடித்து விட்டு வந்த உதவி ஆசிரியர் சொன்னார்...

"ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்ப்பு திறன் உடைய எம்.ஏ., ஆங்கிலம், வரலாறு, பத்திரிக்கையியல் படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அந்த விளம்பரத்தில் தெளிவாக குறிப்பிட்டிருந்தோம்.

ஆனால், எம்.எஸ்.சி., எம்.காம் பட்டதாரிகள், இன்ஜினியரிங் பட்டதாரிகள் என்று நுற்றுக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிந்தன. தெளி வான கையெழுத்துடன் நல்ல ரேங்க் எடுத்த விண்ணப்பதாரர்களை தேர்வு செய்து நேர்முக தேர்வுக்கு அழைத்திருந்தோம்.

"அவர்களிடம் மிக சாதாரண பொது அறிவு கேள்விகள் அடங்கிய வினா பட்டியல் கொடுத்தோம். உதாரணமாக "இந்தியாவில் இப்போது எத்தனை பெண் முதல்வர்கள் இருக்கிறார்கள்?,' "தமிழக சட்டசபையில் மொத்தம் எத்தனை உறுப்பினர்கள்?' என்பது போன்ற கேள்விகள் தான். இன்டர்வியூவிற்கு வந்தவர்களில் பெரும்பாலானோருக்கு இந்த கேள்விகளுக்கு பதிலே தெரியவில்லை. பெண் முதல்வர்கள் பட்டியலில் மாயாவதி, உமாபாரதி என்றெல்லாம் குறிப் பிட்டிருந்தனர். அவர்கள் எல்லாம் இப்போது முதல்வர்களாக இல்லை என்பதே தெரியவில்லை. இப்போது ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராராஜே சிந்தியா, டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் பெயர்கள் அவர்கள் நினைவுக்கு வரவே இல்லை. தமிழக முதல்வர் பெயரை மட்டும் மறக் காமல் குறிப்பிட்டிருந்தனர். தமிழ் நாட்டில் இருப்பதால் இந்த அளவாவது ஞாபகம் வைத்திருக் கிறார்களே என்று சந்தோஷப் படுவதைத் தவிர வேறு வழியில்லை.

"சினிமா பற்றிய கேள்விகளுக்கு மட்டும் ஆண், பெண் என்று வித்தியாசம் இல்லாமல் எல்லாரும் சரியாக பதில் தெரிந்து வைத் துள்ளனர். விளையாட்டு பற்றிய கேள்விகளுக்கு ஒருவர் கூட சரியாக பதில் அளிக்க வில்லை.

"ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்ப்பு பகுதி ஒன்றும் இன்டர்வியூவிற்கு வந்தவர்களிடம் கொடுத்தோம். பட்ட மேற்படிப்பு வரை ஆங்கில வழியிலேயே படித்த அவர்களுக்கு, மிக சாதாரண ஆங்கில செய்தியை கூட தமிழில் மொழி பெயர்க்க முடியவில்லை. சரி, அதாவது போகட்டும்... தமிழாவது சரியாக எழுதினார்களா என்றால், அதுவும் இல்லை. இரண்டு சுழி, மூன்று சுழி, வல்லினம், இடையின வித்தியாசங்கள் தெரியவே இல்லை. தமிழை அப்படி கொலை செய் திருந்தனர்.

"ஆங்கில வழியில் படிக்கிறேன் என்ற பெயரில், தமிழும் தெரி யாமல், ஆங்கிலமும் சரியாக தெரியாமல், பொது அறிவும் இல்லாத அவர்களைப் பார்த்து வருத்தமே மேலிட்டது. இதற்கெல்லாம் கார ணம் நமது கல்வி முறையில் உள்ள கோளாறுதான்.

"ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பர். இந்த பழமொழியை குழந்தைப் பருவத்திலேயே பாடத் திட்டத்தில் சேர்த்து சொல்லிக் கொடுக்கின்றனர். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் வாழ்க்கைக்கு ஏற்ற கல்வியை அரசு தானே வழங்க வேண்டும். ஆனால், கல்லுரிக்கு செல்லும் போது வெறும் புத்தக புழுக்களாகத்தான் மாணவர்களை கல்வித்துறை மாற்றி விடுகிறது. பொது அறிவும் இல்லாமல், ஆங்கில அறிவும் இல்லாமல், தாய்மொழியிலும் புலமை இல்லாமல் வெளி வரும் அந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகத் தான் இருக்கும். சினிமாவும், "டிவி'யும் மாணவர்களை எந்த அளவிற்கு கெடுத்து வைத்துள்ளன என்பதை இந்த இன்டர்வியூ மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.

"ஆங்கிலத்தைப் படிக்காதே, இந்தியைப் படிக்காதே என்றெல்லாம் போர்கொடி உயர்த்தும் அரசியல் தலைவர்கள் இதைப் பற்றியெல்லாம் சிந்திப்பரா?'

—இவ்வாறு அவர் கூறினார்.

—தங்களுக்குப் பின்னால், கொடி பிடித்து வர ஆட்கள் தேவை என்று அரசியல்வாதிகளும், நடிகர் களும் விரும்பும் வரை இந்த கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர அவர்கள் குரல் கொடுக்க மாட்டார்கள் என்று நினைத்துக் கொண் டேன்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.