Friday, May 20, 2005

மே 23 : பெயர்ப் பலகைகளுக்கு தார் பூச்சு.

தனியார் நிறுவனங்கள் தங்களது பெயர்ப்பலகைகளில் எந்த மொழியை உபயோகிக்க வேண்டும்; எந்த மொழியை உபயோகிக்கக் கூடாது; எந்த மொழியை ப்ரதானமாக உபயோகிக்க வேண்டும் எனபனவற்றை எல்லாம், அரசு தீர்மானிக்க முடியுமா? தீர்மானிக்கலாமா?

இது ஒரு தனியார் நிறுவனத்தின் உரிமையில் மூக்கை நுழைப்பது போலில்லை?

எது எப்படியோ, 'தமிழ் பாதுகாவல் போராட்டத்தின்' முதற் கட்டமாக மே 23 ஆம் தேதி , பெயர்ப் பலகைகளுக்கு தார் பூசப்போகிறார்கள். அதாவது, தமிழ் அல்லாத பிற மொழி பிரதானமாக இருக்கும் பெயர்ப் பலகைகளுக்கு தார் பூசப் போகிறார்கள்.

You guessed it. ராமதாஸ், திருமாவளவன் மற்றும் அந்த அணியின் அங்கத்தினர்கள் தான் இந்த வெட்டி வேலையை செய்யப் போகிறார்கள். இந்தக் கூத்து, சென்னை மற்றும் தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் அரங்கேறும்.

"நாங்கள் புதிதாக ஒன்றும் செய்யவில்லை. இது சம்பந்தமாக பிறப்பிக்கப் பட்டிருக்கும் அரசாணையை அரசுக்குப் பதிலாக அமல்ப்படுத்துகிறோம் அவ்வளவுதான்" - என்கிறார்கள் இவர்கள்.

நகரவாசிகள் மே 23 திங்கட்கிழமையன்று, போக்குவரத்து தேக்கம், தடியடி போன்ற இடையூறுகளுக்குத் தயாராக இருங்கள்.

இந்த போராட்டத்துக்கான எனது தனிப்பட்ட கண்டனத்தை இந்தப் பதிவின் மூலம் பதிந்து கொள்கிறேன்.

செய்தி : நன்றி ஹிண்டு
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, May 17, 2005

சென்னை : குடிநீர் தரம் குறையலாம் : டேஞ்சர்

சென்னை மாநகராட்சி - குடிநீரின் தரத்தை பரிசோதிக்கும் சாம்பிள்களின் எண்ணிக்கையை குறைக்கப் போகிறதாம். ஆதாவது இப்போது வருடத்திற்கு 10000 சாம்பிள்கள் பரிசோதிக்கப் படுகிறது. அது 1200 ஆக குறைக்கப் படலாம் என்று தெரிகிறது.

இப்படி குறைப்பதற்கு ஆள் பற்றாக்குறையே காரணம் என்கிறார்கள்.

இது கொஞ்சம் ஓவர். ஏற்கனவே, மலேரியாவினால் இத்தனை பேர் மருத்துவமனையில் அனுமதி, வயிற்றுப்போக்கினால் அத்தனை பேர் அனுமதி என்று செய்தி அவ்வப்போது வருகிறது. இந்நிலையில், டெஸ்ட் பண்ணுவதையும் குறைத்து விட்டால், இவையெல்லாம் அதிமாகிவிடுமோ என்று நான் பயப்படுகிறேன்.

"...he said the focus would now be on the "quality" of the samples rather than the quantity."

அதாவது இனிமேல், quantity அ விட்டுப்புட்டு, quality ல போகஸ் பண்ணப்போறாங்களாம்.
அப்ப இவ்வளவு நா என்னத்த டெஸ்ட் பண்ணாங்கன்னு தெரியல.

அதுவும், இனிமே, எந்த தண்ணியியின் தரத்துல சந்தேகம் இருக்கோ அத்த மட்டும் தான் டெஸ்ட் பண்ணுவாங்களாம்.

சரி. ஆனா, இவங்க எந்த-எந்த தண்ணிய டெஸ்ட் பண்ணாங்க? என்னா ரிஸல்ட்? ஆன்ற விவரம் பொது மக்களுக்கு கிடைக்குமா? அதுக்கு நம்ம "தகவல் அறியும் உரிமை மசோதா" என்னா சொல்லுது?

செய்தி : நன்றி ஹிண்டு.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, May 16, 2005

டெலிபோன் கனெக்ஸன விட சீக்கிரமா ஆயுள் தண்டனை கெடைக்குது

கொலை நடந்து ஒரு மாசத்துக்குள் (29 நாட்கள்) வழக்கு நடந்து முடிந்து தீர்ப்பும் கொடுக்கப் பட்டாகி விட்டது.
ஆயுள் தண்டனை.
இந்த வேகம் ஒரு உலக சாதனையாம்.
சாதனை நிகழ்த்தியிருப்பது சென்னை காவல்துறை; தமிழ்நாடு அதிவேக நீதிமன்றம்.

சென்னையில் நடந்த ஒரு கொலைக்கு , தமிழ்நாட்டில் ஒரு 'அதிவேக நீதிமன்றம்' உண்மையிலேயே அதிவேகமாக வழக்கு நடத்தி இந்த தீர்ப்பளித்திருக்கிறது.

இந்த வேகம் மனதுக்கு நிறைவளிக்கிறது.

அதிவேக நீதிமன்றங்கள் தொடரட்டும்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.