Saturday, May 07, 2005

H1B கோட்டாவுக்குள் ஒரு கோட்டா.

வேலைக்காக அமெரிக்காவுக்கு H1B விஸாவில் வரும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை கோட்டா 65 ஆயிரத்திலிருந்து, 85 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதாவது 20 ஆயிரம் கூடுதல் ஆட்களை அமெரிக்க நிருவனங்கள் H1B விஸாவில் இனி வேலைக்கு எடுக்கலாம்.

ஆனால், இந்த 20 ஆயிரம் விஸாக்கள், அமெரிக்க கல்லூரிகளில் முதுகலைப்பட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட படிப்பை படித்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும்.

("...and make available 20,000 new H-1B numbers limited solely to those aliens who have received a master's or higher degree from a U.S. institution of higher education.")

இது குறித்து ரீடிபின் செய்தி இங்கே.

ரீடிபின் கூற்றுப்படி, USCIS இப்படி புதிதாக கட்டுப்பாடு விதிப்பதற்கு காரணங்களில் ஒன்றாக, "அமெரிக்காவில் மேற்படிப்பு படித்த வெளிநாட்டவரை அமெரிக்காவிலேயே தக்க வைத்துக்கொள்வதற்காக இருக்கலாம்" என்று கூறுகிறது.

இதில் தவறொன்றும் இல்லையென்றாலும் இதற்கு தேவை என்ன வந்தது என்று தெரியவில்லை. அமெரிக்காவில் மேற்படிப்பு படித்தவர்கள் அமெரிக்காவிலேயே வேலை தேடிக் கொள்வது தான் அதிகம். படித்துவிட்டு தன் நாட்டுக்கு திரும்பிச் செல்பவர்களும் இருக்கலாம். ஆனால், அங்கேயே வேலை தேடி அமர்பவர்கள் தான் மெஜாரிட்டி என்று நினைக்கிறேன்.

இதற்காகத் தனியாக கட்டுப்பாடு போட்டு பிடித்து நிறுத்த வேண்டிய அவசியம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

இது ஒரு புறம் இருக்கட்டும்.

இதேபோல், இந்தியாவில் IIT போன்ற - அரசாங்கத்தால் subsidised செய்யப்பட்ட - கல்லூரிகளில் படிப்பவர்களை இந்தியாவிலேயே தக்க வைத்துக்கொள்ள நம் அரசாங்கம் ஏதேனும் செய்ய வேண்டுமா?
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

விபத்துப் பகுதி. மெதுவாகச் செல்லவும்

சென்னையில் வாகனம் ஓட்டுபவராக இருந்தால் இந்த மஞ்சள் நிற இரும்புத் தட்டிகளை நீங்கள் கவனித்திருக்கலாம். லொடுக்.. லொடுக்கென்று நடு ரோட்டில் எந்த எச்சரிக்கையுமின்றி இவைகளை சாலையின் குறுக்காக வைத்திருக்கிறார்கள். "விபத்துப் பகுதி. மெதுவாகச் செல்லவும்." என்று எழுதியிருக்கும்.

இவை விபத்தைக் குறைப்பதை விட அதிகரிக்கத் தான் செய்யும் என்று நினைக்கிறேன்.

உங்கள் அனுபவமும், கருத்தும் என்ன?
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.