Friday, June 10, 2005

மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்தல் தவறா?

நாம், நாம் குடியிருக்கும் இடத்தை, சுற்றுப்புறத்தை, வேலை பார்க்கும் இடம் ஆகியவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதே போல் மாணவர்கள் தங்கள் வகுப்பறையை, அதன் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதே போல், கழிப்பறையையும்.

பள்ளிக்கூடங்களில் பொதுவாக சுற்றுப் புறத்தையும், கழிப்பறையும் சுத்தப்படுத்த ஆயா என்றழைக்கப்படும் பணிப்பெண்களை வேலைக்கு வைத்திருப்பர். ஆனால், மாணவர்கள் தாங்கள் உபயோகிக்கும் கழிப்பறையை தாங்களே சுத்தம் செய்கிறார்கள் என்றால், அது மிகவும் சிறப்பு.

இந்த வேலையைத் தான் செய்யப் பணிக்கப் பட்டனர் - ஈரோடு கணபதிபாளையம் பஞ்சாயத்து தொடக்கப் பள்ளி மாணவர்கள்.

'நல்ல விஷயம் தானே' என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால், கலெக்டர், தலைமை ஆசிரியையும், விஜயலட்சுமி என்ற டீச்சரையும், தற்காலிக பணி நீக்கம் செய்து விட்டார்.

அந்தப் பள்ளியில், இது நடைமுறையில் இருக்கும் பழக்கம் தானாம். இன்று இருவர், நாளை இன்னொறு இருவர் - என்று, ஒவ்வொரு நாளும் கழிப்பறை மாணக்கர்களால் சுத்தம் செய்யப்படும்.

ஒரு விஷயம். அன்று வகுப்பில் பாடம் நடந்து கொண்டிருக்கும் போதே, மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய விஜயலட்சுமி டீச்சை பணித்திருக்கிறார். இது கண்டிக்கப் பட வேண்டியது தான். ஆனால், இதற்காக டீச்சர்கள் பணி நீக்கம் செய்யப்படுதல் கொஞ்சம் ஓவர். அதற்கு மாறாக, இந்த முறையை ஒழுங்கு படுத்தி, சிறப்பாக நடைமுறைப் படுத்தியிருக்கலாம்.

"இது போல் ஏதாவது பள்ளியில், மாணவர்களை வருப்பறையை சுத்தம் செய்யச் சொன்னதாகத் தெரிந்தால், தலைமை ஆசிரியையும், டீச்சரும் நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்" - இது கலெக்டரின் கண்டிப்பு.

//The Collector warned school teachers not to entrust any work to students, especially cleaning classrooms and collecting water. In case of any such complaint, the concerned teacher and the headmaster or headmistress of the school would be dismissed.//

அபத்தம்!!



நன்றி - ஹிண்டு
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

6 Comments:

Blogger Thangamani said...

இது அபத்தம் தான். ஆனால் மாணவர்கள் அந்தக்கழிப்பறையை உபயோகிக்க அனுமதிக்கப் படுவதில்லை, வேறு கழிப்பறையும் அவர்களுக்கு இல்லை என்பதால் அந்தக்கழிப்பறையை ஆசிரியர்களே சுத்தம் செய்திருக்கவேண்டும். ஆனால் நமது பாரம்பரியச் சிந்தனை இம்மாதிரி பார்க்காது என்பதால் (மாணவர்கள் ஆசிரியருக்கு சேவை செய்வது புதிதல்ல என்ற வகையில்) இது குற்றமுமல்ல. மாறாக அந்த ஆட்சியர் இந்தப்பிரச்சனையை ஆசிரியர்களுடன் பேசி மாணவர்களுக்கு ஒரு கழிப்பறையையும் கட்டித்தந்து அதை சுழல் முறையில் அவர்களே சுத்தம் செய்யும் ஏற்பாட்டை ஆசிரியர்களோடு கலந்து செய்திருந்தால் எல்லோருக்கும் நல்லது. இப்போது யாருக்கும் பயனற்ற ஒரு அதிகாரமே செயல்பட்டிருக்கிறது. ஆசிரியர்களின் அதிகாரம் மாணவர்களிடம், ஆட்சியரின் அதிகாரம் ஆசிரியர்களிடம்.

தினமலரில் படத்தோடு வந்திருக்கிறது.

நன்றிகள்.

4:30 PM  
Blogger முகமூடி said...

எது அபத்தம்... மாணவர்களை கழிப்பறை சுத்தம் செய்ய விடுவதா?? ஏன் ஆசிரியர்கள் அதை செய்வதில்லை?? கலெக்டரோ உயரதிகாரியோ வருகிறார் என்றால் நீங்கள் பொது கழிப்பறையை சுத்தம் செய்வீர்களா?? ஆசிரியர்கள் டிஸ்மிஸ் செய்யப்படாமல் சஸ்பென்ட் செய்யப்ப்ட்டது வேண்டுமானால் அபத்தம்...

4:59 PM  
Blogger புலம்பல்ஸ் said...

முகமூடி-

கலெக்டர் வருகைக்கும், இதற்கும் சம்மந்தம் கிடையாது. இது அந்தப் பள்ளியில் இருந்து வரும் நடைமுறை தான். //ஏன் ஆசிரியர்கள் அதை செய்வதில்லை// நல்ல கேள்வி. அவர்களை தற்காலிக வேலைநீக்கம் செய்வதற்கு பதில், ஆசிரியர்களும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட சில விதிமுறைகளுடன் கலெக்டர் இதை நடைமுறைப்படுத்தி இருக்கலாம்.

11:38 AM  
Blogger முகமூடி said...

// இது அந்தப் பள்ளியில் இருந்து வரும் நடைமுறை தான் // மாணவர்களை நடைமுறை என்ற பெயரில் கழிப்பறை சுத்தம் செய்ய விடுவது இறக்கமற்ற செயல் என்பதே என் கருத்து. எத்தனை மாணவர்கள் சுய விருப்போடு அதை செய்வார்கள் என்று நினைக்கிறீர்கள். பல பேர் கட்டாயத்தின் பேரிலும் மிரட்டலின் பேரிலும் செய்யலாம் அல்லவா... அவர்கள் படிக்க அனுப்பப்பட்டார்களா இல்லை கழிப்பறை சுத்தம் செய்யவா என்று சிந்தியுங்கள். 18 வயது குறைந்தோரை சட்டம் ஏன் தனியாக கையாளுகிறது. அறிவு முதிர்ச்சி முழுதும் அடையாத, ஆசிரியர்கள் சொல்வதை பயம் பாதி/மரியாதை மீதி என்ற வகையில் செய்யும் சிறுவர்களை வேலைக்கு பயன்படுத்துவதை குற்றம் இல்லை என்கிறீர்களா??

3:34 PM  
Blogger Koothu said...

முகமூடி சொன்னதோடு முழுவதும் ஒத்துப்போகிறேன். நாளைக்கே அந்த பள்ளியில் வகுப்பறை இல்லாத நாலாப்பு பசங்கலுக்காக ஒரு கட்டிடம் கட்டுகிறார்கல் என்று வைத்துக்கொள்வோம். அவர்களுக்காகத்தானே கட்டுகிறார்கள் என்று பசங்களை செங்கல் சுமக்கவும் சிமின்ட் பூசவும் பயன் படுத்தினால் அதை ஒத்துக்கொள்வீர்களா?
புலம்பல்ஸின் இந்த பதிவு சரியான உளரல்ஸ்!

5:48 PM  
Blogger அல்வாசிட்டி.சம்மி said...

நல்ல விவாதப்பொருள் அண்ணாச்சி. மேலும் தங்கமணியும், முகமூடியும் சொன்ன கருத்துக்கள் அருமை.

இதுபோன்று நம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது நம் கடமையென ஆசிரியர்கள் சொல்லிக்கொடுப்பதோடு நின்று விடாமல் தாமே மாணவர்களுக்கு அதை செய்தும் காண்பித்தால் (கழிவறை கழுவுவது உட்பட) மாணவர்கள் அச்செயலை ஒரு வேலையாக செய்யாமல் ஈடுபாட்டுடன் செய்வார்கள் என்பது எம் கருத்து.

7:48 PM  

Post a Comment

<< Home