Monday, May 23, 2005

தமிழக இளைஞர்களில் பொது அறிவு: அந்துமணி's take.

தினமலர் - வாரமலர் - மே 22 இதழ் - பா.கே.ப பகுதியில், அந்துமணி எழுதியிருப்பதை அப்படியே கீழே கொடுத்திருக்கிறேன்.

Copyright Dinamalar

Copyright விதி மீறல் இருந்தால் யாராவது சொல்லுங்கள். பதிவை எடுத்து விட்டு, லிங்க் மட்டும் கொடுக்கிறேன்.

============
நமது இதழில் பயிற்சி அளிப்பதற்காக, தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடந்தது. இதற்கென, சென்னையிலிருந்து மூத்த செய்தி ஆசிரியர்கள் பல்வேறு நகரங்களுக்குச் சென்றனர். தேர்வு நடத்தி திரும்பிய சிலருடன் பேசிக் கொண்டிருந்தேன்.
கோவையில் தேர்வு நடத்தி, திரும்பி இருந்த பெண் உதவி ஆசிரியை கூறினார்:

"ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்து விட்டது. எந்த கல்வித் தகுதி வேண்டும் என்று குறிப்பிட்டு விளம்பரப்படுத்தி இருந்தோம்; இருப்பினும், பல வகையான கல்வித் தகுதிகளுடன் விண்ணப்பங்கள் குவிந்தன.

"விண்ணப்பத்தைப் படித்துப் பார்த்தால், அந்தச் சாதனை, இந்தச் சாதனை என்று பட்டியல் நீள்கிறது. ஏராளமான பட்டங்கள், சான்றிதழ்களும் சேர்க்கப் பட்டு விண்ணப்பங்கள் வந்தன.

"இவர்களுக்கு வைத்த எழுத்துத் தேர்வு தாட்களைப் பார்த்த எனக்கு கண்ணீரே வந்துவிட்டது... ஆங்கில மொழியோ, தமிழ் மொழியோ... ஒரு வரி விடையில் கூட எழுத்துப் பிழை இல்லாமலில்லை. குறிப்பாக, பொது அறிவுக் கேள்விகளுக்கு, எந்த பட்டப் படிப்பு படித்தவர்களுக்கும் பதிலே தெரிவதில்லை.

"படிப்பறிவு மிக்க நகரங்களில் கூட இதே நிலை தான். "தியரட்டிகல்' அறிவை வைத்துக் கொண்டு, ஆகாயக் கோட்டை கட்டும் நிலை தான் உள்ளது. அன்றாட வாழ்வுக்குத் தேவையான தகவல்களை அறிந்து கொள்ளும் ஆர்வமோ, பொது அறிவை வளர்த்துக் கொள்ளும் ஆவலோ எதிர்கால சந்ததியினருக்கு இல்லை; சினிமா சம்பந்தப்பட்ட தகவல்களை மட்டும் சுடச்சுட 'அப்டேட்' செய்து கொள்கின்றனர் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. 'இந்தியாவில் உள்ள பெண் முதல்வர்கள் யார் யார்?' என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை. 'பிரைடு அண்டு பிரிஜுடைஸ்' படத்தில் நடித்த இந்திய நடிகை யார்?' என்ற கேள்விக்கு ஒட்டுமொத்தமாய் அனைவரும் சரியான பதிலளித்திருந்தனர்.

"பொது அறிவை வளர்த்துக் கொள்வதில் ஆண்கள் சற்று ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், சுற்றி நடக்கும் விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. பெண்களிடம் பொது அறிவு மிக, மிகக் குறைவாகவே உள்ளது. படிப்பில் சூரப் புலிகளாய் விளங்கினாலும், தினசரி நடப்புகளை அறிந்து கொள்ள ஒரு சதவீதம் கூட ஆர்வம் காட்டு வதில்லை. கல்விச் சான்றிதழே தெய்வம் என்று இருக்கின்றனர்.

"தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. எல்.கே.ஜி., முதல் துவங்கி, இளநிலை பட்டப் படிப்பு வரை 17 ஆண்டுகள் இந்த இரு மொழி களையும் படித்து வெளியேறுபவர் களுக்கு இந்த இரு மொழிகளிலுமே அடிப்படைத் தவறே இல்லாமல் எழுதத் தெரியாமல் போவதற்கு காரணம் யார் என்று தெரிய வில்லை...' என்றார்!

மதுரையில் தேர்வு முடித்து விட்டு வந்த உதவி ஆசிரியர் சொன்னார்...

"ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்ப்பு திறன் உடைய எம்.ஏ., ஆங்கிலம், வரலாறு, பத்திரிக்கையியல் படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அந்த விளம்பரத்தில் தெளிவாக குறிப்பிட்டிருந்தோம்.

ஆனால், எம்.எஸ்.சி., எம்.காம் பட்டதாரிகள், இன்ஜினியரிங் பட்டதாரிகள் என்று நுற்றுக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிந்தன. தெளி வான கையெழுத்துடன் நல்ல ரேங்க் எடுத்த விண்ணப்பதாரர்களை தேர்வு செய்து நேர்முக தேர்வுக்கு அழைத்திருந்தோம்.

"அவர்களிடம் மிக சாதாரண பொது அறிவு கேள்விகள் அடங்கிய வினா பட்டியல் கொடுத்தோம். உதாரணமாக "இந்தியாவில் இப்போது எத்தனை பெண் முதல்வர்கள் இருக்கிறார்கள்?,' "தமிழக சட்டசபையில் மொத்தம் எத்தனை உறுப்பினர்கள்?' என்பது போன்ற கேள்விகள் தான். இன்டர்வியூவிற்கு வந்தவர்களில் பெரும்பாலானோருக்கு இந்த கேள்விகளுக்கு பதிலே தெரியவில்லை. பெண் முதல்வர்கள் பட்டியலில் மாயாவதி, உமாபாரதி என்றெல்லாம் குறிப் பிட்டிருந்தனர். அவர்கள் எல்லாம் இப்போது முதல்வர்களாக இல்லை என்பதே தெரியவில்லை. இப்போது ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராராஜே சிந்தியா, டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் பெயர்கள் அவர்கள் நினைவுக்கு வரவே இல்லை. தமிழக முதல்வர் பெயரை மட்டும் மறக் காமல் குறிப்பிட்டிருந்தனர். தமிழ் நாட்டில் இருப்பதால் இந்த அளவாவது ஞாபகம் வைத்திருக் கிறார்களே என்று சந்தோஷப் படுவதைத் தவிர வேறு வழியில்லை.

"சினிமா பற்றிய கேள்விகளுக்கு மட்டும் ஆண், பெண் என்று வித்தியாசம் இல்லாமல் எல்லாரும் சரியாக பதில் தெரிந்து வைத் துள்ளனர். விளையாட்டு பற்றிய கேள்விகளுக்கு ஒருவர் கூட சரியாக பதில் அளிக்க வில்லை.

"ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்ப்பு பகுதி ஒன்றும் இன்டர்வியூவிற்கு வந்தவர்களிடம் கொடுத்தோம். பட்ட மேற்படிப்பு வரை ஆங்கில வழியிலேயே படித்த அவர்களுக்கு, மிக சாதாரண ஆங்கில செய்தியை கூட தமிழில் மொழி பெயர்க்க முடியவில்லை. சரி, அதாவது போகட்டும்... தமிழாவது சரியாக எழுதினார்களா என்றால், அதுவும் இல்லை. இரண்டு சுழி, மூன்று சுழி, வல்லினம், இடையின வித்தியாசங்கள் தெரியவே இல்லை. தமிழை அப்படி கொலை செய் திருந்தனர்.

"ஆங்கில வழியில் படிக்கிறேன் என்ற பெயரில், தமிழும் தெரி யாமல், ஆங்கிலமும் சரியாக தெரியாமல், பொது அறிவும் இல்லாத அவர்களைப் பார்த்து வருத்தமே மேலிட்டது. இதற்கெல்லாம் கார ணம் நமது கல்வி முறையில் உள்ள கோளாறுதான்.

"ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பர். இந்த பழமொழியை குழந்தைப் பருவத்திலேயே பாடத் திட்டத்தில் சேர்த்து சொல்லிக் கொடுக்கின்றனர். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் வாழ்க்கைக்கு ஏற்ற கல்வியை அரசு தானே வழங்க வேண்டும். ஆனால், கல்லுரிக்கு செல்லும் போது வெறும் புத்தக புழுக்களாகத்தான் மாணவர்களை கல்வித்துறை மாற்றி விடுகிறது. பொது அறிவும் இல்லாமல், ஆங்கில அறிவும் இல்லாமல், தாய்மொழியிலும் புலமை இல்லாமல் வெளி வரும் அந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகத் தான் இருக்கும். சினிமாவும், "டிவி'யும் மாணவர்களை எந்த அளவிற்கு கெடுத்து வைத்துள்ளன என்பதை இந்த இன்டர்வியூ மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.

"ஆங்கிலத்தைப் படிக்காதே, இந்தியைப் படிக்காதே என்றெல்லாம் போர்கொடி உயர்த்தும் அரசியல் தலைவர்கள் இதைப் பற்றியெல்லாம் சிந்திப்பரா?'

—இவ்வாறு அவர் கூறினார்.

—தங்களுக்குப் பின்னால், கொடி பிடித்து வர ஆட்கள் தேவை என்று அரசியல்வாதிகளும், நடிகர் களும் விரும்பும் வரை இந்த கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர அவர்கள் குரல் கொடுக்க மாட்டார்கள் என்று நினைத்துக் கொண் டேன்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

12 Comments:

Blogger சங்கரய்யா said...

தினமலரும், வாரமலரும் போன்ற பத்திரிகைகளைப் படித்தால், பொது அறிவு எப்படி வளரும்

11:35 PM  
Blogger குழலி / Kuzhali said...

//தினமலரும், வாரமலரும் போன்ற பத்திரிகைகளைப் படித்தால், பொது அறிவு எப்படி வளரும் //

இதில் வேறு அந்துமணியார் தமிழிலேயே அதிகம் விற்பனையாகும் வாரப்பத்திரிக்கை எது என்பதற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் 10லட்சம் பிரதி விற்பனையாகின்றதாம் தினமலர், வாரமலர் இலவச இணைப்பு என்பதால் யாரும் வாரப்பத்திரிக்கை என கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என புலம்பல் வேறு, வாரமலரில் பல ஆண்டுகளாக பிரபல எழுத்தாளர்களின் கதைகளை பிரசுரிப்பது இல்லையாம் ஏனென்றால் அவர்கள் சரியான நேரத்தில் கதை கொடுப்பதில்லையாம், அதுமட்டுமின்றி வேறு பல பிரச்சனைகள் பிரபல எழுத்தாளர்கள் எழுதும் போதாம், பிரபல எழுத்தாளர்கள் இன்றியே 10 லட்சம் பிரதிகள் விற்பனையாகின்றதாம்

வாரமலரை சினிமா துணுக்கு,கிசு கிசுக்காகவும் இது உங்கள் இடத்திற்காகவுமே படிக்கின்றனர் என்பது ஊரறிந்த உண்மை

வாரமலரை இலவச இணைப்பின்றி தனியாக வாரப்பத்திரிக்கையாக விற்பனை செய்தால் தெரியும் அதனுடைய உண்மை விற்பனை

7:42 AM  
Blogger புலம்பல்ஸ் said...

இது தினமலர் நடத்திய தேர்வே அன்றி; தினமலர்/வாரமலர் படிப்பவர்களுக்கு நடத்தப்பட்டதன்று.

அந்துமணி/வாரமலர் சொல்கிறார்/சொல்கிறது என்பதனாலேயே மேற்ச்சொன்ன கருத்துக்களை ஒதுக்க வேண்டியதில்லை.

எனக்கும் அந்துமணியைப் பிடிக்காது தான். உ.பா. உ.பா என்று, தண்ணியடிப்பதைப் பற்றியே, இந்த பா.கே.ப பகுதியில் எழுதிக்கொண்டிருப்பார்.

வாரமலரில், 'திண்ணை' என்றொரு பகுதி வரும். நான் அப்பக்தியை விரும்பிப் படிப்பதுண்டு. சினிமா சமாச்சாரங்களையும், புரட்டுவதுண்டு தான். ஹி. ஹி.

9:01 AM  
Anonymous Anonymous said...

in dinamalar there is no edit page.dinamalar does not publish articles analysing current developments.they sensationalise
news and give more importance to
gossip and petty politics.do they expect that people with a good
knowledge of current affairs
will consider dinamalar as a daily worth reading.the applicants knowledge is as good as that of anthumani's.so why should anthumani complain.the fault is with them.there are problems with
indian educational system.but do they expect that the best and brilliant will apply for jobs in
dinamani.

11:01 AM  
Blogger மாயவரத்தான்... said...

//வாரமலரை இலவச இணைப்பின்றி தனியாக வாரப்பத்திரிக்கையாக விற்பனை செய்தால் தெரியும் அதனுடைய உண்மை விற்பனை//

குழலி.. என்ன லாஜிக் இது? ஏதோ ஒரு காரணத்திற்காக 10 லட்சம் பேர் வாங்குகிறார்கள் அல்லவா? வேண்டுமானால் அதிகம் பேர் வாங்கும் தின பத்திரிகை என்று வைத்து கொள்வோமே! கிசுகிசுக்கள், சினிமா செய்திகளுக்காக பத்திரிகை விற்பனையாவதை வேண்டுமானால், கூட்டணிக் கட்சியின் புண்ணியத்தில் வெற்றி பெற்றுவிட்டு, தங்களால் தான் ஆறேழு மாவட்டங்களில் எல்லாமே அசையும் என்று உதார் விடும் அரசியல் கட்சிகள் மாதிரி என்று வைத்துக் கொள்ளுவோமே!

7:39 AM  
Anonymous Anonymous said...

BTB,

who is this Anthumani ? what is his real name and is he a relative of Dinamalar Management ? he has been writing Pa.Ke.Pa for past 18+ years. How come he is being sent abroad tours, internal tours just to write about in Pa.Ke.Pa ? he always travels in Toyota Corolla or Camry or latest model cars, has dinner/parties in 5-star hotel restaurents, pool side houses.

who is HE ? why so much importance to him in Dinamalar ? i suppose he is writing the teakadai bench daily.

Kumar V

12:55 AM  
Anonymous Anonymous said...

//he always travels in Toyota Corolla or Camry or latest model cars//

He has said in one of the Replies that he has no car but only an old model bicycle. Could that be true?

6:12 AM  
Anonymous Anonymous said...

anthumani is the son of dinamalar's owner.last week dinakaran published it.His name is Ramesh alias Ramasubbu

7:27 AM  
Anonymous Anonymous said...

Athumani also lies a lot. He says that he doesnot know english and will quotes some English articles, and will tell that he read the article with the help of a sub editor????. He is the only one who does not drink and vegetarian, in his crew ???????. All other with him the lence MAMA will drink and eat non veg. He is supposed to be a office boy in dinamalar office as per his writing. A RICH OFFICE BOY WHO USED TO GO POSH HOTELS, FREQUENT FOREIGN TRAVEL, COSTLY DRESS, SHOES, AND USES COSTLY CARS. WE HAVE TO BELIVE IT ALL.

10:16 PM  
Blogger வேல்பாண்டி said...

//குழலி.. என்ன லாஜிக் இது? ஏதோ ஒரு காரணத்திற்காக 10 லட்சம் பேர் வாங்குகிறார்கள் அல்லவா? வேண்டுமானால் அதிகம் பேர் வாங்கும் தின பத்திரிகை என்று வைத்து கொள்வோமே! கிசுகிசுக்கள், சினிமா செய்திகளுக்காக பத்திரிகை விற்பனையாவதை வேண்டுமானால், கூட்டணிக் கட்சியின் புண்ணியத்தில் வெற்றி பெற்றுவிட்டு, தங்களால் தான் ஆறேழு மாவட்டங்களில் எல்லாமே அசையும் என்று உதார் விடும் அரசியல் கட்சிகள் மாதிரி என்று வைத்துக் கொள்ளுவோமே!//


குழலி,

உமாவுக்கு அந்துமணி கொடுத்த டார்ச்சரை ராமதாசு கலைஞருக்கு கொடுக்கும் டார்ச்சர் போல
என்று வைத்துக் கொள்ளுவோமே! இப்படியும் மாயவரத்தான் சொல்லுவார்.

என்ன லாஜிக் இது?

- வேல்

10:17 PM  
Anonymous Anonymous said...

en ya ippadi maanjikireenga, 'sundaynna rendu' vilambaram onnu pothatha dinamalar makkala pathi therinjikka? ? ? ?

12:11 AM  
Anonymous prathibha said...

Hello anthumani,I am Prathibha.I am a 15 yrs girl from a village known as VATHTHIRAYIRUPPU near Srivillipuththur.I am a fan of you lens mama. Jusst now I have completed my 10th standard. I want to see your original face. Pls,send your photo to my E-mail ID. My ID is prathichellam@rediffmail.com. Pls pls andhu chiththappa

12:31 AM  

Post a Comment

<< Home