Thursday, May 26, 2005

Customer Support : மார்க் ஸ்பீக்கிங்

லேப்டாப் வாங்கி நான்கு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. அதனுடன் வந்த ஆன்ட்டி வைரஸ் மென்பொருளின் trial period முடிந்து விட்டது. அதனால், இரண்டு நாள் முன்பாக அலுவலக தளத்திலிருந்து Symantec ஆன்ட்டி வைரஸ் தரவிரக்கம் செய்தேன்.

வந்தது வினை.

லேப்டாப்புடன் வந்த நார்ட்டன் ஆன்ட்டி வைரஸ் மென்பொருளும், புதிதாக install செய்த Symantec க்கும், முட்டி மோதி, ஒன்றையும் வேலை செய்ய விடாமல் செய்து விட்டன. Browser கூட திறக்கமுடியவில்லை. எவ்வளவோ முயன்றும், இவைகளை uninstall செய்ய முடியவில்லை.

விதியை நொந்துகொண்டு, நேற்றிரவு, Compaq support ஐ விளித்தேன். எடுத்தவர் மார்க் என்ற புனைப்பெயரில் பேசினார். இந்தியாவுக்குத் தான் அழைப்பு செல்லும் என்று தெரியும்.

படிப்படியாக உதவிக்கொண்டிருந்தார்.

நார்ட்டன் ஆன்ட்டி வைரஸ் uninstall ஆக நிறைய நேரம் பிடித்தது. காத்திருந்த நேரத்தில், மார்க் என்னைப்பற்றி குசலம் விசாரித்துக் கொண்டிருந்தார். 'இந்தியாவில் நீங்கள் எந்தப்பகுதியைச் சேர்ந்தவர்?' 'எந்தக் கல்லூரியில் படித்தீர்கள்?' 'அங்கு என்ன வேலை செய்து கொண்டிருக்கிறீகள்?' 'எவ்வளவு வருடமாக அங்கு இருக்கிறீர்கள்?' என்றெல்லாம் கெட்டுக் கொண்டிருந்தார். ( இந்தியர் என்ற பாசத்தில் detailed ஆகக் கேட்டுக் கொண்டிருந்தார் போலும்.)

'நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்?' என்றேன்.
'சென்னை'.
'டைடல் பார்க்கிலா?'
'இல்லை. வேளச்சேரி'.

கண்டிப்பாக தமிழராகத் தானிருப்பார். தமிழில் பேசலாமா என்றெண்ணினேன். ஆனாலும் ஆங்கிலத்திலேயே தொடர்ந்து கொண்டிருந்தேன். 'மார்க்' என்று கூறினாரே? அதனாலோ? அவரது புனை முகத்தை கடந்து உள்ளே செல்ல வேண்டாமென்று என் உள்மனம் எண்ணி விட்டதோ என்னமோ?

நார்ட்டனை வெளியேற்றியாகி விட்டது. நன்றி கூறி விடைபெற்றேன்.

ஆனாலும், மார்க் வாக்கியத்துக்கு வாக்கியம் 'ஸார்' போட்டது உறுத்தியது. இங்கு Customer Support ல் யாரும் 'ஸார்' போடுவதாகத் தெரியவில்லை.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

1 Comments:

Blogger Voice on Wings said...

அழைப்பு மையங்களில் எல்லோருக்கும் மேற்கத்திய பெயர் வைப்பது போன்ற பழக்கங்கள் கடைபிடிக்கப் பட்டு வருவதாக அறிகிறேன். இது பணியாளர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டதா இல்லை கட்டாயத்தினால் வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டதா எனத்தெரியவில்லை. அமெரிக்காவில் உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து (உச்சரிக்கக் கடினமான பெயர்களைக் கொண்ட) குடிபுகுந்தவர்கள் இருக்க, அவர்களுக்கு இந்தியப் பெயர்களின் உச்சரிப்பு வருமோ வராதோ என்று நாமே கவலையுற்று நம் பெயர்களை மாற்றிக் கொள்ளும் அவலத்தை என்னவென்பது?

மேற்கத்தியப் பெயரை வைத்துக் கொண்டவர்தான் தமக்கு உதவியளிக்கத் தகுதியானவர் என்று அவதியிலிருக்கும் வாடிக்கையாளர் எவரேனும் கருத்து தெரிவித்துள்ளனரா? நம்மை நாமே சிறுமை படுத்திக் கொள்ளூம் இத்தகைய செயல்களை ஏன் எவரும் எதிர்ப்பதில்லை? பண்பாட்டு வன்முறைக்குச் சிறந்தவொரு எடுத்துக் காட்டாகத் திகழும் இத்தகைய நடைமுறைகள் ஏன் பரவலான ஆதரவைப் பெறுகின்றன? (BPOவால்தான் இந்தியாவுக்கு விடிவுகாலமென்று சத்தியம் செய்யும் கூட்டமொன்று இருப்பதை பலரும் அறிந்திருக்கலாம். NASSCOM போன்ற குழுக்களும் அதில் அடக்கம்)

அதிக மதிப்பளித்து 'சார்' என்று விளித்ததை விட மேற்கூறியவை என்னை அதிகம் உறுத்துகிறது.

11:09 AM  

Post a Comment

<< Home