Sunday, May 29, 2005

அகராதி.com ??

"Dictionary.com" அப்டீன்னு ஒரு வலைத்தளம் இருக்குது. நான் அடிக்கடி விஸிட் செய்யும் ஒரு தளம். வலையில் ஏதேனும் படித்துக் கொண்டிருக்கும் பொழுது, அர்த்தம் புரியாத வார்த்தைகளுக்கு உடனடியாக அர்த்தம் புரிந்துகொள்ள மிகவும் கையகமாக (handy) இருக்கும் தளம்.

இந்தத் தளத்திலிருந்து தினமும் எனக்கொரு மின்னஞ்சல் வருகிறது. அதாவது, "Word of the Day".

தினம் ஒரு வார்த்தை, அதன் அர்த்தம், அதை உபயோகிக்கும் முறைக்கு இரண்டு அல்லது மூன்று உதாரணங்கள், வார்த்தையின் ரிஷி-மூலம்.

எல்லா வார்த்தைகளும் மனதில் பதிந்து விடும் என்பதல்ல; என்னளவில், பத்தில் ஒன்று பதிந்தாலே போதும் தான்.

இது போல், தமிழில் ஏதேனும் ஒரு சேவை இருந்தால், சிறப்பாக இருக்கும். அதாவது, ஆங்கில வார்த்தைகள் குறைவாக பயன்படுத்த வேண்டும். அதற்கு ஈடான தமிழ் வார்த்தைகள் இருக்கின்றன என்று கூறுபவர்கள், புதிய கலைச் சொற்க்கள் போன்றவற்றை புழக்கத்தில் விட இது ஒரு நல்ல வழியாக இருக்கும்.

==

Subscribe க்கு தமிழ் வார்த்தை என்ன? Guidance க்கு தமிழ் வார்த்தை என்ன? சில சொற்களுக்கு, தமிழில் வார்த்தை சிந்திக்கும் போது, i just draw a blank.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

4 Comments:

Blogger Badri said...

Guidance = வழிகாட்டுதல். To guide = வழிகாட்டு.

Subscribing to a magazine = இதழின் சந்தாதாரர் ஆதல், இதழுக்கு சந்தா வாங்குதல். Subscription = (மாத, வருட) சந்தா.

To subscribe to an idea, belief, notion, view = கொள்கையை ஏற்றுக்கொள்தல்.

9:44 AM  
Blogger Voice on Wings said...

Tamil - English online dictionary can be found
here. Doesn't support tamil fonts, so enter queries in romanized tamil according to the transliteration scheme indicated in this page.

Another thing, if you are using Firefox, there are extensions to enable you to do dictionary search(english) from the right-click menu. See here

9:19 PM  
Blogger அன்பு said...

இது போல், தமிழில் ஏதேனும் ஒரு சேவை இருந்தால், சிறப்பாக இருக்கும்.
இருக்கிறது:
http://groups.yahoo.com/group/tamizhvalarchchi

3:03 PM  
Blogger புலம்பல்ஸ் said...

அன்பு, மிக்க நன்றி. Subscribe செய்து கொள்கிறேன். (சந்தா செய்து கொள்கிறேன்! சரியா வருது?? (அ) சந்தாதாரர் ஆகி விடுகிறேன்.?!)

4:48 PM  

Post a Comment

<< Home