Tuesday, May 17, 2005

சென்னை : குடிநீர் தரம் குறையலாம் : டேஞ்சர்

சென்னை மாநகராட்சி - குடிநீரின் தரத்தை பரிசோதிக்கும் சாம்பிள்களின் எண்ணிக்கையை குறைக்கப் போகிறதாம். ஆதாவது இப்போது வருடத்திற்கு 10000 சாம்பிள்கள் பரிசோதிக்கப் படுகிறது. அது 1200 ஆக குறைக்கப் படலாம் என்று தெரிகிறது.

இப்படி குறைப்பதற்கு ஆள் பற்றாக்குறையே காரணம் என்கிறார்கள்.

இது கொஞ்சம் ஓவர். ஏற்கனவே, மலேரியாவினால் இத்தனை பேர் மருத்துவமனையில் அனுமதி, வயிற்றுப்போக்கினால் அத்தனை பேர் அனுமதி என்று செய்தி அவ்வப்போது வருகிறது. இந்நிலையில், டெஸ்ட் பண்ணுவதையும் குறைத்து விட்டால், இவையெல்லாம் அதிமாகிவிடுமோ என்று நான் பயப்படுகிறேன்.

"...he said the focus would now be on the "quality" of the samples rather than the quantity."

அதாவது இனிமேல், quantity அ விட்டுப்புட்டு, quality ல போகஸ் பண்ணப்போறாங்களாம்.
அப்ப இவ்வளவு நா என்னத்த டெஸ்ட் பண்ணாங்கன்னு தெரியல.

அதுவும், இனிமே, எந்த தண்ணியியின் தரத்துல சந்தேகம் இருக்கோ அத்த மட்டும் தான் டெஸ்ட் பண்ணுவாங்களாம்.

சரி. ஆனா, இவங்க எந்த-எந்த தண்ணிய டெஸ்ட் பண்ணாங்க? என்னா ரிஸல்ட்? ஆன்ற விவரம் பொது மக்களுக்கு கிடைக்குமா? அதுக்கு நம்ம "தகவல் அறியும் உரிமை மசோதா" என்னா சொல்லுது?

செய்தி : நன்றி ஹிண்டு.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

Anonymous Anonymous said...

தகவல் அறியும் மசோதாவது மண்ணாவது. அத பத்தி எழுதுனவனே காசு குடுத்து தண்ணி வாங்கி குடிப்பான்.

7:00 PM  
Blogger புலம்பல்ஸ் said...

காசு கொடுத்து வாங்குற தண்ணியும் இதுல அடங்கும்னு நெனைக்கிறேன். அதாவது, தனியார் விலைக்கு விற்க்கிற தண்ணியும், சென்னை மாநகராட்சியின் தரக்கட்டுப்பாட்டின் கீழே வரும்னு நெனைக்கிறேன்.

ஆனா இந்த தரக் கட்டுப்பாடு matter-ல ISI யின் பங்கு என்னன்னு தெரியல.

8:12 PM  

Post a Comment

<< Home