Friday, May 20, 2005

மே 23 : பெயர்ப் பலகைகளுக்கு தார் பூச்சு.

தனியார் நிறுவனங்கள் தங்களது பெயர்ப்பலகைகளில் எந்த மொழியை உபயோகிக்க வேண்டும்; எந்த மொழியை உபயோகிக்கக் கூடாது; எந்த மொழியை ப்ரதானமாக உபயோகிக்க வேண்டும் எனபனவற்றை எல்லாம், அரசு தீர்மானிக்க முடியுமா? தீர்மானிக்கலாமா?

இது ஒரு தனியார் நிறுவனத்தின் உரிமையில் மூக்கை நுழைப்பது போலில்லை?

எது எப்படியோ, 'தமிழ் பாதுகாவல் போராட்டத்தின்' முதற் கட்டமாக மே 23 ஆம் தேதி , பெயர்ப் பலகைகளுக்கு தார் பூசப்போகிறார்கள். அதாவது, தமிழ் அல்லாத பிற மொழி பிரதானமாக இருக்கும் பெயர்ப் பலகைகளுக்கு தார் பூசப் போகிறார்கள்.

You guessed it. ராமதாஸ், திருமாவளவன் மற்றும் அந்த அணியின் அங்கத்தினர்கள் தான் இந்த வெட்டி வேலையை செய்யப் போகிறார்கள். இந்தக் கூத்து, சென்னை மற்றும் தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் அரங்கேறும்.

"நாங்கள் புதிதாக ஒன்றும் செய்யவில்லை. இது சம்பந்தமாக பிறப்பிக்கப் பட்டிருக்கும் அரசாணையை அரசுக்குப் பதிலாக அமல்ப்படுத்துகிறோம் அவ்வளவுதான்" - என்கிறார்கள் இவர்கள்.

நகரவாசிகள் மே 23 திங்கட்கிழமையன்று, போக்குவரத்து தேக்கம், தடியடி போன்ற இடையூறுகளுக்குத் தயாராக இருங்கள்.

இந்த போராட்டத்துக்கான எனது தனிப்பட்ட கண்டனத்தை இந்தப் பதிவின் மூலம் பதிந்து கொள்கிறேன்.

செய்தி : நன்றி ஹிண்டு
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

15 Comments:

Blogger நற்கீரன் said...

இப்பிடியான போராட்டம் கனடாவில் பிரான்சு மொழி மக்களால் ஒரு காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. கனடா இரண்டு மொழி கொள்கைக்கு மாறுவதற்க்கு இப் போராட்டம் ஒரு உந்து சக்தி. இப்படிப்பட்ட போராட்டம் ஒரு அடையாளப் போராட்டமே. நீங்கள் சற்று அதிகம் ஆத்திரப்படுகின்றீர்கள் என்று நினைக்கின்றேன்.

7:31 PM  
Anonymous Anonymous said...

இதோ போல எந்த மாநிலம் இந்தியோவோடு சேர்ந்திருக்க வேண்டும் என்று மட்டும் ஒரு அரசு கட்டாயப்படுத்தலாமா? அதற்கு பெரிய ராணுவத்தை அனுப்பிப் பல ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்று குவிக்கலாம்.

அதாவது நாடு என்று வந்தால் எத்தனைப் பேரை வேண்டுமானாலும் கொன்றுகுவிக்கலாம். ஆனால் மொழி என்று வந்தால் தார்பூசி அழிப்பதுகூட உங்களுக்கு வெட்டிவேலை ஆகிவிடும்.

உங்கள் சுதந்திரத்தின் எல்லைதான் என்ன?

11:57 PM  
Blogger குழலி / Kuzhali said...

பெங்களூரிலே ஒரே ஒரு நிறுவனம் கூட கன்னடத்தில் பெயர்ப்பலகை எழுதாமல் இருந்த்ததில்லை, அத்தனை நிறுவனங்களும் பெயர்பலகைகளில் ஆங்கிலம் மற்றும் கன்னடத்திலே எழுதியுள்ளன, அதே நிறுவனங்கள் சென்னையிலே ஆங்கிலத்தில் மட்டுமே பெயர்ப்பலகையில் எழுதியுள்ளன தமிழில் இல்லை, இதற்கு காரணம் என்ன?

இதெயெல்லாம் கேட்ககூடாது என்கிறாரா புலம்பல்ஸ், உடனே இது இராமதாசு மற்றும் திருமா செய்வதால் ஆதரிக்கிறேன் என யாரும் ஜல்லியட்க்க வேண்டாம், இதை யார்செய்தாலும் ஆதரிப்பேன்

1:23 AM  
Blogger VIJI said...

i agree with you Hari...

4:18 AM  
Blogger புலம்பல்ஸ் said...

வியாபாரிகள், 22 பாஷைகளில் பெயர்ப்பலை எழுதினால், வியாபாரம் பெருகுமென்றால், 22 பாஷையிலும் எழுதுவார்கள். அவர்கள் என்ன, தமிழில் எழுதினால் அசிங்கமென்றா எழுதாமலிருக்கிறார்கள்?

தமிழ் படிக்கத் தெரியாதவர்கள் அந்தக் கடைக்கு போக மாட்டார்கள் அவ்வளவு தான். இதனால் நட்டப் படுவது கடை போட்டிருப்பவர்கள் தானே?

"கர்நாடகாவில் பேருந்துகளில் பலகைகள் கன்னடத்தில் மட்டும் தான் இருக்கும்.. பக்கத்துல நிக்கிறவங்க கிட்ட கேட்டுத் தான் ஏறணும்" அப்டின்னு என் நண்பன் ஒரு முறை என்னிடம் கூறியிருக்கிறான். (இப்போ எப்டின்னு தெரியாது. கொஞ்ச வருஷம் முன்.)

என்னைக் கேட்டால், தனியாரைப் பொறுத்த வரையில், "Survival of the Fittest" தான். எது ஒர்க் அவுட் ஆவுமோ அது பண்ணுவாங்க. (அதுக்காக மக்கள் விரோதமாகவோ; நுகர்வோருக்கு ஆபத்து நேரும்படியோ ஏதேனும் செய்தால் , கண்டிப்பாகத் தட்டிக் கேட்க வேண்டும்.)

"தமிழில் பலகை எழுதுங்கள்." என்று கேட்டுக் கொள்ளலாம். "தமிழில் பலகை எழுது" என்று கட்டாயப்படுத்துவது கொஞ்சம் ஓவர். அதுவும் வன்முறை உபயோகித்தல் கண்டிக்கத்தக்கது. (தார் பூசல், வன்முறை என்று கருதுகிறேன்.)

மக்களுக்கு உதவ வேண்டுமா? ஆட்டோக்காரர்களை மீட்டர் போடச்சொல்லுங்கள். புற நகர்களில் சாலைகள் கேவலமாக இருக்குது. அதைச் செப்பனிட வழி செய்யுங்கள். குடித்து விட்டு வாகனம் ஓட்டி, தினம் நெடுஞ்சாலைகளில் பத்தும் இருபதுமாகச் சாகிறார்கள். அதற்கு ஏதேனும் தீர்வு காண முடியுமா பாருங்கள். உங்களுக்கு புண்ணியமாப் போவும்.

11:29 AM  
Blogger காஞ்சி பிலிம்ஸ் said...

பிரான்சில் பெயர் பலகைகள் கண்டிப்பாக பிரெஞ்சில் இருக்க வேண்டும். அல்லாமல் போனால் அபராதம் கட்டவேண்டிவரும். அதைவிட மேலாகவும் சென்று பிரெஞ்சு அரசாங்கம் பிரான்சில் பதிவு செய்துள்ள வலப்பதிவுகள் அனைத்தும் பிரெஞ்சில் தான் இருக்கவேண்டும் என்றும் ஆங்கிலமோ மற்ற மொழிகலோ இரெண்டாம் பட்சம் தான் என்று சட்டம் இயற்றி நடைமுரைப் படுத்தியுள்ளார்கள். ஆங்கிலம் தெரிந்தாலும் பிரெஞ்சிலேயே வெளிநாட்டவருடன் பேசுவதையே பெருமையாக கருதுபவர்கள் இவர்கள். பிரான்சில் அனைவரும் "திருமா"க்கள். மொழி,மற்றும் பாரம்பரியத்திற்கு உயிரை விடுபவர்கள்.
தமிழ்நாட்டிற்கு வரும் மற்ற மாநிலத்தவரை விட பிரான்சிற்கு வரும் வெளிநாட்டவர் அதிகம்.அவர்கள் யாருக்கும் பிரெஞ்சு தெரிய வாய்ப்பில்லை என்றாலும்,இங்கு பெயர் பலகைகள் பிரெஞ்சில் தான் இருக்கிறது.

//தமிழ் படிக்கத் தெரியாதவர்கள் அந்தக் கடைக்கு போக மாட்டார்கள் அவ்வளவு தான். இதனால் நட்டப் படுவது கடை போட்டிருப்பவர்கள் தானே?//

இலாபம் மட்டும் தான் குறிக்கோள் என்றால் அனைவரையும் "கஞ்சா" விற்க அனுமதிப்பீர்களா?

3:23 PM  
Blogger dondu(#4800161) said...

பா.ம.க. கட்சி அலுவலக் பெயர்ப்பலகையில் தைலாபுரம் என்னும் ஊர்ப்பெயர் ஆங்கிலத்தில் மட்டும் இருந்ததே, அதற்கு தார் அடிப்பார்களாமா? நான் பலமுறை கூறிவிட்டேன், இருப்பினும் மறுபடியும் கூறுவேன். சென்னை நகரில் உள்ள ஜிம்கானா க்ளப்பில் தமிழர் உடையாம் வேட்டி சட்டை போட அனுமதி இல்லையே. அதன் முன் போய் ஏன் ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது? எப்படி செய்வார்கள்? முக்கால்வாசி சம்பந்தப்பட்டத் தலைவர்களோ அல்லது சூட்டு கோட்டுடன் உலா வரும் அவர் மகன்களோ கூட அந்த க்ளப்பில் உறுப்பினராக இருக்கலாம் யார் கண்டது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

5:10 PM  
Blogger முகமூடி said...

ப்ரான்சில் ப்ரெஞ்சில் மட்டும் படித்து மருத்துவ டாக்டர் ஆகலாம், விஞ்ஞானியாகலாம், ஆராய்ச்சிகள் செய்யலாம். கடைசி தகவல் வரை மொழிபெயர்க்கப்பட்டு அப்டேட் ஆகிறது. தமிழ்நாட்டில் முடியுமா? தமிழ்நாடு மாநிலம்தான் ப்ரான்ஸ் மாதிரி முன்னேறிய நாடல்ல... ராமதாஸ் ஆங்கிலத்தில்தான் டாக்டருக்கு படித்திருப்பார், தமிழில் படிக்க வழிவகை செய்வாரா? தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவத்தின் இன்றைய நிலை என்ன? உடம்பு முடியாவிட்டால் டாக்டரிடம் போகிறீர்களா இல்லை வைத்தியரிடம் போகிறீர்களா?

// இப்படிப்பட்ட போராட்டம் ஒரு அடையாளப் போராட்டமே // ஹிந்தி போராட்டம் ஞாபகம் இருக்கிறதா? ஹிந்தியுடன் போகட்டும் என்றால் இப்ப ஆங்கிலத்தையும்... முதலில் தமிழ்நாட்டில் தமிழை தவிர வேறு மொழி தேவையில்லை என்ற நிலை ஏற்படுடட்டும். அரசியல்வாதிகள் அப்போலோ மருத்துவமனை போகாமல் தமிழில் படித்த அரசாங்க டாக்டரிடம் செல்லும் போது தமிழர்கள் அனைவரும் தார் டப்பாவை கையில் தூக்குவோம்.

5:56 PM  
Blogger மாயவரத்தான்... said...

தமிழ்நாட்டு மக்கள் வயிற்றுப்பிழைப்புக்காக வெளி மாநிலங்களுக்கோ செல்லலாம், வெளி நாடுகளுக்கு பறக்கலாம். இது மட்டும் சரியா காஞ்சி பிலிம்ஸ்? காசு மட்டும் குறிக்கோள் இல்லை, என்று தமிழ்நாட்டிலேயே உட்கார்ந்திருக்க வேண்டியது தானே?!

7:22 PM  
Anonymous Anonymous said...

Dear all

Dont delete this comment as it would be in english(i dont have option to post it in tamil).
May be this protest is right what is the actual objective of the leaders participating there(ramadoss & thiruma).
To develop tamil there are lot other ways than this. U know how schools & colleges are in tamilnadu where one can pass out without knowing tamil.
Instead they can protest for creating a new law which should make one tamil paper compulsory till graduation for the people whose mother tongue is tamil.
But the same will not be taken as an agenda for these people as they are really not interested in tamil but votes.
Even though this blog is in english i am still a guy who loves tamil and tries to speak tamil without english words.
Politicising of this thing will only lead to disaster and not any constructive happening.
(kulali i have read some of your blogs where u have justified Anbumani's children studying in some school where there is no tamil paper. If it is true then Ramadoss or anbumani has no right to protest in this way)

By

Prakash
( till i have a blog i need to write as anonymus only. and can somebody help me how to write a comment in tamil as no options are available here)

4:30 AM  
Blogger குழலி / Kuzhali said...

//Instead they can protest for creating a new law which should make one tamil paper compulsory till graduation for the people whose mother tongue is tamil.
//

இப்போது மை பூசியது கூட சட்டத்தை நிலை நாட்டத்தான், ஏற்கனவே தமிழிலும் பெயர்பலகைகள் கட்டாயம் இருக்க வேண்டுமென அரசாணை இருந்தும் நடைமுறை படுத்தப்படவில்லை, இந்த மாதிரியான சட்டங்களெல்லாம் இயற்றினாலும் இதே நிலைமைதான்.

6:37 PM  
Blogger Anonymous said...

This comment has been removed by a blog administrator.

11:16 PM  
Blogger கொழுவி said...

//ராமதாஸ் ஆங்கிலத்தில்தான் டாக்டருக்கு படித்திருப்பார், தமிழில் படிக்க வழிவகை செய்வாரா?//

யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ கல்லூரிகளில் இன்னமும் தமிழில் தான் கற்பிக்கப்படுகிறது. அங்கே படித்த பலர் வெளியெ வந்து கடமை புரிகிறார்கள்.

12:45 AM  
Blogger புலம்பல்ஸ் said...

ப்ரகாஷ், தமிழில் எழுத நான் இந்த http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm பக்கத்தை உபயோகிக்கிறேன். முயன்று பாருங்கள்.

12:09 PM  
Blogger ரவிசங்கர் said...

தமிழ்நாட்டில் தமிழில் விளம்பரப்பலகை வைக்கச் சொல்லி சட்டம் போட வேண்டியிருப்பதே வெட்கக்கேடு. சட்டத்தை மதிக்காத வணிகர்களுக்கு ஏன் எவரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.? தமிழில் பெயர் எழுதுவதால் எல்லாம் தனியார் நிறுவன்ங்களின் உரிமை ஒன்றும் குடி முழுகிப்போய் விடாது.

10:09 AM  

Post a Comment

<< Home