Saturday, April 23, 2005

'காதல்' படம் நல்லாருக்கு

'காதல்' இப்ப தான் பாத்து முடிச்சேன். நல்லாருக்கு. இயற்க்கையாக, செயற்க்கைத்தனங்கள் அதிகமில்லாம இருக்கு படம். படம் முடியும்போது நெஞ்சு கனமாயிடிச்சி.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையா வெச்சி எடுத்திருக்காரு.

கொஞ்ச நா முன்னாடி ஜெயா டிவி 'அச்சமில்லை அச்சமில்லை'ல ஒருத்தர் இது மாதிரி தான், என் மனைவிய (ஓடிப்போயி கல்யாணம் கட்டிக்கிட்டாங்க அவங்களும்) அவங்க வீட்டுல அடச்சி வெச்சிட்டு என் கூட அனுப்ப மாட்டேங்குறாங்கன்னு பேட்டி குடுத்தாரு. இந்த படத்த பாக்கும்போது அது தான் ஞாபகம் வந்திச்சி.

இளம் காதலர்கள் ஓடிப்போவதும், அவங்கள தேடிப்புடிச்சி வந்து உதைக்கிறதும் கிராமத்துல சகஜம் போல.

திருந்தணும்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home