Thursday, October 14, 2004

இந்தியாவில் தேர்தல் நேர வாக்குவாதங்கள்?

அமெரிக்காவில் நிகழும் தேர்தல்களின் போது நடக்கும் வாக்குவாதங்கள் (Debates) போல் இந்தியாவில் நடத்தப்பட்டால், அது இந்திய அரசியல் தரம் உயர உபயோகப்படும் என்று நினைக்கிறீர்களா?
முடிந்தால் இது குறித்த உங்கள் கருத்தை comments பகுதியில் பதிவு செய்யுங்கள்.

தேர்தல் நேர வாக்குவாதங்கள் இந்திய அரசியல் தரத்தை உயர்த்துமா?
ஆம்
இல்லை
தெரியவில்லைFree polls from Pollhost.com


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, October 12, 2004

சென்னையில் போக்குவரத்து நெரிசல்

சில நாட்களாக ஹிண்டு, சென்னையின் போக்குவரத்து நிலை குறித்து சில கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது.
வேலைக்குச் செல்வோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியுறும் நிலை; குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களின் அதிகரிப்பு மற்றும் ஆபத்து; பார்க்கிங் செய்ய இடமில்லாமல் சிரமப்படுவோரின் பரிதாபம் போன்றவை குறித்து ஒவ்வொன்றிலும் விளக்கியிருக்கிறது.

உண்மையாகவே மனம் வருத்தமுறுகிறது.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமானதற்கு காரணங்கள் கூறப்படுகிறது :-
அரசு பேருந்துகள் reliable ஆக இல்லை. நேரத்திற்கு வருவதில்லை. வந்தாலும் கூட்டம் கட்டுக்கடங்காமலிருக்கிறது. அதனால் நேரத்துக்கு வேலைக்குச் செல்ல முடியவில்லை. ஆகவே பலர் சொந்த இரு/நாலு சக்கர வாகனங்களுக்கு மாறி விட்டனர்.
சொந்தமாக (கடனுக்கு) வாகனங்கள் வாங்குவது சுலபமாகி விட்டது.
மக்களின் வாழ்க்கைத்தரமும் சிறிது கூடித்தான் போய்விட்டது. (அதாவது, மேல்தட்டு, மற்றும் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை முறை.)

ஆனாலும், இந்த வசதிகளை எல்லாம் முழுமையாக அனுபவிக்க நம் மக்களுக்கு கொடுப்பினை இல்லை போலும்.

வண்டிய கொண்டு போனா, ட்ராஃபிக் ஜாம்; தாறு மாறா ஓட்டுர அரசுப்பேருந்து ஓட்டுனர்கள், தண்ணி லாரி ஓட்டுனர்கள்; தண்ணி போட்டு விட்டு ஓட்டும் லாரி மற்றும் இன்ன பிற வாகன ஓட்டுனர்களால் ஆபத்து; சரியான பார்க்கிங் வசதி இல்லாமை.

இவைகளை எல்லாம் சமாளிக்க சென்னை மாநகராட்சி ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறதா? தெரியவில்லை.

அல்லது, இதற்க்கெல்லாம் இன்னது தான் தீர்வு. என்று ஏதாவது independant commision recommend செய்திருக்கிறதா என்றும் தெரியவில்லை.

நான் என்ன சொல்லுறேன்னா, "சென்னையில், வேலைக்குப்போவோர் சங்கம்" அப்டின்னு எதனா இருக்கும். அதை முதலில் கூட்ட வேண்டும், அவர்கள் கூட்டாகச் சேர்ந்து சில recommendations/suggestions தயாரிக்க வேண்டும். அல்லது, ஒரு இன்டெபென்டன்ட் குழு அமைத்து, அவர்களை சகலத்தையும் ஆராய்ந்து இதற்கு தீர்வு என்னவென்று ஒரு report கொடுக்கச் சொல்ல வேண்டும். பின் அதை எடுத்துக்கொண்டு அரசாங்கத்திடம் சென்று நிறைவேற்றச்சொல்ல வேண்டும். Report இன் படி திட்டத்தை நிறைவேற்ற ஒரு காலவணை தயாரிக்கப்பட வேண்டும். அதன் படி வேலை நடக்காவிட்டால், முதற்க்கட்டமாக, "வாகன வரி கட்ட மாட்டேன்" முதற்க்கட்டமாக அடம்பிடிக்கலாம்.

மேலும் :
Gateway to the city choked by traffic
Rush hour rain throws traffic out of gear

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, October 11, 2004

தமிழை ஆட்சி மொழி ஆக்க என் உயிரையும் தரத்தயார்

"தமிழை ஆட்சி மொழி ஆக்க என் உயிரையும் தரத்தயார்" -- அப்டின்னு கருணாநிதி ரெண்டு நாள் முன்னாடி சொல்லியிருக்காரு.

"தந்துருங்க"ன்றேன்.

ஏன்னா, மக்களுக்கு உருப்படியா ஒண்ணும் செய்யிறது இல்லைன்னு முடிவு பண்ணியாச்சு.
ஜெயலலிதா எது சொன்னாலும் அதுக்கு எடக்கு மடக்கா ஏதாவது சொல்லுறது பொழுது போக்குன்னு வெச்சிக்கிட்டாச்சு.
தமிழ செம்மொழி ஆக்கியாச்சு. (இன்னும் இத் சொல்லி எத்தனை வருஷம் பீத்திக்க்ப் போறிங்கன்னு தெரியயல). அடுத்தது தமிழ ஆட்சி மொழி ஆக்கணும்னு ஆரம்பிச்சிருக்கீங்க.
தமிழக அரசிடம் ஆக்கபூர்வமான முறையில் போராடி, மக்கள் ப்ரச்சினைகளை தீர்க்க தெம்பில.

பின்ன?
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

தமிழக முதல்வர் - கரன் தப்பார் பேட்டி

தமிழக முதல்வர் - கரண் தப்பார் பேட்டி : கருத்துக்கள்

1. முதல்வர் அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகம்னு பல பேர் சொல்லி கேட்டிருக்கேன். அது உண்மை இல்லைன்னு தெரியுது. ஜோசியம், ந்யூமராலஜில நம்பிக்கை இருக்குது. ஆனா, அத ஒத்துக்க தைரியம் இல்லை. (அதையெல்லாம் நம்புறது கேவலமானதுன்னு நெனைக்கறாங்க போல..) அப்படி இருக்கறவங்களப் போயி தன்னம்பிக்கை உள்ளவங்கன்னு சொன்னா நம்ப முடியுதா? (அதாவது, தன் நம்பிக்கைகளின் மீதே நம்பிக்கை இல்லாதவர்).

2. ஜனநாயகத்துல நம்பிக்கை இல்லாதவங்க : அமைச்சரவைய நான் இஷ்ட்டத்துக்கு மாத்துவேன். அதக்கேக்க யாருக்கும் உரிமை கெடையாதுன்னு சொல்லுறது ஜனநாயகமா?

3. ரொம்ப சில்லறைத்தனமானவங்க : நீ மட்டும் பேப்பரப் பாத்துப் படிக்கறியே!?

4. குறைந்த பட்ச பண்பாடு கூட இல்லாதவங்க : அரசியல் எதிரியாகவே இருந்தாலும் நல்ல நட்பு பாரட்டி வாழ்ந்தவர்கள் தமிழகத்தில் உண்டு. சாதாரண ஒரு பேட்டியாளர் ஏதோ நாலு கேள்வி கேட்டுட்டான்றதுக்காக (அவர் தொழிலே கேள்வி கேக்குறது தான் !!) "உங்களை சந்திததில் எனக்கு சந்தோஷம் இல்லை" அப்டின்னு சொல்லிட்டாரு. இவங்கள்ளாம், என்னத்த அரசியல் நடத்தி, என்னத்த நாடு முன்னேறி!!

எனக்கு புரியாதது என்னன்னா, இந்த பேட்டியப்பத்தி, வேற எந்த செய்தித்தாளும் செய்தி (அ) கருத்து வெளையிட்டா மாதிரி தெரியலை. (அப்டியே பாய்ஞ்சி கிழி கிழின்னு கிழிச்சிருக்க வேண்டாமா?)

குறிப்பா சன் டிவி இதப்பத்தி வாயத்திறந்த மாதிரி தெரியலை. (இம்புட்டுக்கும், கருணாநிதிய கைது பண்ணினப்போ, சன் டிவி காட்டுன வீடியோ வெறும் டகால்டின்னு இந்த பேட்டில சொல்லியிருக்காங்க.)
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.