Tuesday, July 20, 2004

எறியுற வீட்டுல கொள்ளையடிக்கிறது

கும்பகோணம் தீ விபத்துல பாதிக்கப்பட்டவங்கள பாத்து ஆறுதல் சொல்ல , கடந்த வாரத்துல மட்டும் ஏகப்பட்ட அரசியல்வாதிங்க அங்க போயிருக்காங்க.

அரசியல்வாதிங்கன்னா, அவங்க மட்டுமா போனா(வா)ங்க? அவங்க கூட ஒரு அஞ்சாறு தொண்டர்க் கூட்டம். அப்பறம் பாதுகாப்புக்கு ஒரு பத்து போலிஸ்காரங்க.

எனக்குத் தெரிஞ்சு, யாரெல்லாம் போயிருக்காங்கன்னா, பாருங்க... ஜெயலலிதா, தயாநிதி மாறன், ஸ்டாலின், அன்புமணி ( ராமதாஸ் பையன் ), ராகுல் காந்தி, ஸோனியா காந்தி, அத்வானி, விஜயகாந்த், ஒரு போட்டோ-ல அஜித்தக்கூட பாத்தேன்.

சரி. ராகுல் காந்தி எதுக்கு போனாரு? அவர - தீ விபத்துல பாதிக்கப்பட்டவங்களுக்கு எத்தனை பேருக்குத் தெரியும்? சரி. தெரியும்னே வெசிப்போம். அவர் பேசுறது அங்க எவ்வளவு பேருக்குப் புரியும்? தமிழே பேசத்தெரியாம அவர் அங்க போயி என்னத்த ஆறுதல் சொல்லப்போறாறு? இவரு அங்க போறதுனால பலனடையப்போறது - இவரத்தவிர வேற யாராவது இருக்காங்களா? இல்ல இவரு அங்க போயி ரிப்போர்ட் குடுக்கலைன்னு யாராவது கவலைப்பட்டாங்களா?

ஆர்வப்பட்டவங்க எல்லாம் போய் பாக்க இது என்ன தேர்த் திருவிழாவா? ஆஸ்பத்திரி. எல்லாம் தீக்காயம் பட்டவங்க. ஏதாச்சும் ஒண்ணுக்கு எக்ஸ்போஸ் ஆச்சுதுன்னா, சட-சடன்னு இன்பெக்ஷன் ஆயிடும். இவங்கல்லாம் ஏர்ப்போர்ட்ல இருந்து ஆஸ்பத்திரிக்கு போற வழில குளிச்சிட்டு சுத்தமா போனாங்களா? அவங்களோட போன தொண்டர்ப்படை, போலீஸ்காரங்க இவங்கல்லாம் குளிச்சாங்களா?

எதுக்கு போகணும்? பண உதவி பண்ணறதுன்னா, இருந்த இடத்துலருந்தே பண்ணலாமே?! இல்ல நேர்ல பாக்காட்டா பணம் குடுக்க மாட்டீங்களா? சரி. குடுக்க வேண்டாம்.

அத்வானி, சோனியா காந்தி இவங்கள்ளாம் வர்ரதா இருந்த சும்மாவா? எவ்வளவு ஏற்பாடு பண்ணணும்? அந்த கலெக்டர் பையன் காயம் பட்டவங்களுக்கு சிகிச்சைய பாப்பாரா? இதுக்கு காரணமானவங்கள அரெஸ்ட் பண்ணற வழிய பார்ப்பாரா? இல்ல, செத்தவங்கள புதைக்கறதுக்குண்டான ஏற்ப்பாட்ட கவனிப்பாறா? (சுடுகாட்டுல லைட், மண்வெட்டி, ஆள் எதுவும் இல்லையாம்!!) இல்ல, இந்த பெரிசுங்களோட பாதுகாப்ப கவனிப்பாறா?

கும்பகோணம் ஒரு சின்ன ஊர். இவ்வளவு அரசியல் வாதிங்க ஒரு வாரத்துக்குள்ள வந்தா அந்த ஊர் தாங்குமா? யோசிக்க வேண்டாமா? உங்களுக்கு அவ்வளவு அக்கறை இருந்தா, ஒரு டீம் அமைக்கிறது. "இந்த பாருங்கப்பா, நான் வந்தா அமக்களம் ஆயிடும். இது இதெல்லாம் சரியா நடக்குதான்னு ரெண்டு நாளைக்கு ஒரு தரம் எனக்கு ரிப்போர்ட் குடுங்க"- சொல்லலாமே.. நேர்ல தான் வரணும்னு இல்லையே.

அங்க வந்த அரசியல்வாதிங்களுக்கு பாதுகாப்பு மற்றும் பிற ஏற்பாடு பண்ணறது ஒரு வேலையா இருந்ததுன்னு அந்த கலெக்டர் rediff -ல சொல்லியிருக்காரு. பிபிசி லயும் "ஏகப்பட்ட அரசியல்வாதிங்க தேவையில்லாம வர்ரது நெருக்கடியா இருக்குன்னு" சொன்னாங்க.

அந்த மருத்துவமனைக்கு யாரு பொறுப்போ - அவரு என்ன சொல்லியிருக்கணும்? இவ்வளவு பேர் தான் வந்து பாக்கணும் - சும்மா கச்சா முச்சான்னு வராதீங்கன்னு சொல்லியிருக்கணும்ல?
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.