Wednesday, June 30, 2004

கோத்ரா ரயிலுக்கு முஸ்லிம்கள் தீ வைக்கவில்லை.

"கோத்ராவில் ரயிலில் வந்த கர சேவகர்களை முஸ்லிம்கள் தீ வைத்து கொளுத்தினார்கள்" - என்பத்ற்க்கான ஆதாரங்கள் இல்லை என்று விசாரணை தெரிவிப்பதாகச் சொல்கிறது அவுட்லுக் இதழ். அது வெறும் விபத்து போல் தான் இருக்கிறதாம். அதற்க்கான பல ஆதாரங்கள் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. இவைகளைப் பற்றி அவுட்லுக் கட்டுரை விவரிக்கிறது.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

ஜெயப்ரகாஷ் நாராயண்

'லோக் ஸட்டா' அமைப்பின் தலைவர், ஜெயப்ரகாஷ் நாராயண் நேற்று எங்கள் அலுவலகத்தில், ஒரு கூட்டத்தில் பேசினார். இந்திய அரசியல் மற்றும் பிற துறைகளில் லோக் ஸட்டா ஆற்றிக்கொண்டிருக்கும் பணிகள் பற்றி உரை நிகழ்த்தினார். சென்ற வருடம் பெற்ற பல வெற்றிகள் பற்றியும் கூறினார். இந்தியா நல்ல திசையில் சென்று கொண்டிருப்பதற்கு பல உதாரணங்கள் தந்து ஒரு பாஸிட்டிவ் அவுட்லுக் கொடுத்தார்.

சத்யேந்திர தூபே பேசாமல் எங்களிடம் வந்திருந்தால், இந்நேரம் உயிரோடிருந்திருப்பார். அங்கு நடைபெற்ற ஊழலையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருப்போம் என்றார். தூபே அப்பாவியாக இருந்ததால் உயிரழக்க நேரிட்டது என்றார்.

நான் "அமெரிக்காவிலிருக்கும் ப்ராப்பஸிஷன் ஸிஸ்ட்டம் போல் இந்தியாவிலும் வந்தால் நல்லா இருக்குமே.. வருமா ? எப்ப வரும் ?" என்று பொத்தாம் பொதுவாக கேட்டு வைத்தேன்.

"வந்தா நல்லாருக்கும்..." என்றார்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, June 28, 2004

சாராயமும், லாட்டரியும்.

கொஞ்ச நாள் முன்னாடி, தமிழக அரசு லாட்டரிய தடை பண்ணினாங்க. நல்ல விஷயம் தான். ஆனா அதுலயும் ஒரு கெடுதல் இருக்குன்னு அப்ப புரியலை. பல பேர் வேலை இழந்துட்டாங்க. கிண்டி ரயில்வேஸ்டேஷன் போனீங்கன்னா (அட.. இப்ப போயி என்னாவப்போவுது? ) முன்ன எப்பவாவது போயிருந்திருந்தீங்கன்னா.. பலர் லாட்டரி விக்கறத பாத்திருப்பீங்க. இதுல கண்பார்வை இல்லாதவங்க நிறைய இருப்பாங்க.

லாட்டரி சீட்ட மறுபடியும் கொண்டு வரணும்னு பலர் தமிழக அரசுக்கு கோரிக்கை வெச்சாங்க நேத்திக்கு.

எனக்கு இது மாதிரி விஷயங்கள்ள எப்பவுமே புரியாதது என்னன்னா.. நம்ம ஓட்டு போட்டு வந்த ஆட்சி தான். நம்ம அங்கீகரிச்சு தான் ஆட்சி பண்ணிட்டிருக்காங்க. ஆனாலும், அரசின் இந்த மாதிரி நடவடிக்கைகள்ள - பெரும்பான்மை மக்களுக்கு ஒப்புதல் இருக்கும்னு என்ன நிச்சயம்? அவங்க என்ன - "நாங்க ஆட்சிக்கு வந்தா லாட்டரிய ஒழிப்போம்"னு முன்னமேயே சொன்னாங்களான்ன? அப்டி இருக்கும்போதும், இது எப்டி ஜனனாயகம் ஆகும்?

அது ஒரு பக்கம் இருக்கட்டும். கொஞ்ச நாள் முன்னாடி சாராயக்கடைகள தமிழக அரசே எடுத்து நடத்த முடிவு பண்ணி, நடத்திக்கிட்டிருக்கு.

இதுல எனக்கு என்ன நெருடல்னா, தமிழக அரசுப்படி, சாராயம் தப்பில்லையாம். லாட்டரி ரொம்ப தப்பாம். இது எந்த ஊரு நியாயம்?
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.