Tuesday, May 04, 2004

குற்ற வரலாறு உள்ள வேட்பாளர்கள் ( லிஸ்ட் - 2)

பொதுத் தேர்தல் 2004 - ல் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில், யார் யாரின் பெயரில் வழக்கு (சிவில்/கிரிமினல்) நிலுவையில் இருக்கிறது (அல்லது ஏற்கனவே தண்டனை அளிக்கப்பட்டுள்ளது) என்று பார்த்து அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சி.

இந்த விவரங்களை வேட்பாளர்கள் அவர்களாவே தர வேண்டும். எந்த வழக்குகளைப் பற்றிய விவரங்கள் அவர்கள் தர வேண்டுமென்றால்,

-- அந்த வழக்கில் இரண்டு அல்லது அதற்கு மேல் சிறைத் தண்டனை பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

-- இரண்டு அல்லது அதற்கு மேல் சிறைத் தண்டனை பெறுவதற்கு வாய்ப்பு இருக்கும் வழக்கு நிலுவையில் இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இருக்கும் 39 தொகுதிகளில், இவ்வாறான வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் வேட்பாளர்களை அடையாளம் காட்டும் முயற்சியில் இது ரெண்டாவது லிஸ்ட். (முதல் லிஸ்ட் இங்கே)

மதுரை
--------
போஸ், A.K (அதிமுக)

திருச்சிராப்பள்ளி
----------------
கணேசன். L (மதிமுக)

புதுக்கோட்டை
------------
ரகுபதி. S (திமுக)

திருநெல்வேலி
------------
தனுஷ்கோடி ஆதித்தன், R. (காங்)
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, May 03, 2004

குற்ற வரலாறு உள்ள வேட்பாளர்கள் (லிஸ்ட் - 1)

(பார்க்க :- முந்தைய பதிவு)

குற்ற வரலாறு உள்ள வேட்பாளர்கள் (லிஸ்ட் - 1) (இன்னும் 19 தொகுதி பாக்கி இருக்கிறது.)

வட சென்னை
--------------
C. குப்புசாமி (திமுக)

மத்திய சென்னை
--------------
N. பாலகங்கா (அதிமுக)

சிரிபெரும்புதூர்
--------------
கிருஷ்ணசுவாமி. A (திமுக)

சிதம்பரம்
--------------
பெரியசாமி. D (பாஜக)

கிருஷ்ணகிரி
--------------
சுகவனம். E. G (திமுக)

கோபிசெட்டிப்பாளையம்
------------------
இளங்கோவன், E. V. K. S (காங்)

(இவர்கள் மீது என்ன வழக்குகள் நிலுவையில் உள்ளது; போன்றவை பற்றிய மேல் விவரங்களுக்கு தேர்தல் கமிஷன் பக்கத்தைப் பார்க்கவும். (http://www.elections.tn.nic.in/ --> Affidavits of Candidates ))
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

வந்தே விட்டது. வேட்பாளர் ஜாதகங்கள்.

மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வேட்பாளர் ஜாதகங்கள் - இன்டெர்னெட்டில் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

(http://www.elections.tn.nic.in/ --> Affidavits of Candidates )

இதுலயிருந்து உங்க தொகுதி வேட்பாளர்களின் ரெண்டு விஷயங்க நீங்க தெரிஞ்சுக்கலாம்.

1. சொத்து விவரம். (Affidavit Regarding Assets/Liabilities)
2. குற்ற விவரம். (Affidavit In Form 26(Rule 4A))

எனக்கு ரெண்டாவதுல தான் ஆர்வம். அநேகமானவர்களோட ஜாதகத்துல, இந்த ரெண்டாவது படிவத்துல entry இல்லை. (சந்தோஷம்.)

நான் என்ன பண்ணப்போறேன்னா, ஒவ்வொரு தொகுதியிலும் ப்ரொமினென்ட் கட்சிகளின் (திமுக, ஆதிமுக, பாமக, காங், பாஜக போன்றவை) சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்ற விவரத்துல ஏதாவது entry இருந்ததுன்னா, அந்த விவரத்த இங்க - உங்க வசதிக்காக வெளியிடலாமுன்னு இருக்கேன்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

மாலனின் ஜால்ரா

சன் டிவியில், ஞாயிறன்று கருணாநிதியுடன் ஒரு தொலைபேசி வழி உரையாடல் - நிகழ்ச்சி இருந்தது. நிகழ்ச்சி நேரடி ஒலிபரப்பு. (அமெரிக்காவில் இப்போதுள்ளது போல் ஐந்து நொடி டிலே-க்கு இன்னும் இந்தியாவில் அவசியம் வரவில்லை.)

கருணாநிதி அவர்கள் நன்றாக உரையாடினார். அளவாகப்பேசினார். கேட்ட கேள்விகளுக்கு விளக்கெண்ணை போடாமல் பதிலினார். மக்களின் கேள்விகளை நேரடியாக சந்திக்க ஒரு தைரியம் வேண்டும். அவர் சந்திதார்.

நிகழ்ச்சியில் அழைத்த பலர் அநேகமாக தமிழ்நாட்டில், தண்ணீர்ப் பஞ்சம், விலைவாசி ஏற்றம், கெளரவ ரேசன் அட்டை போன்றவற்றை பற்றிக்கூறி - திமுக ஆட்சிக்கு வந்தால் அவற்றை நிவர்த்தி செய்வீர்களா என்று கேட்டனர். கருணாநிதி - எல்லாம் செய்வோம் என்றார்.

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர் மாலன் அவர்கள்.
நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், திமுக-வின் அடிமட்டத் தொண்டர் ரேஞ்சுக்கு ஜால்ரா போட்டார்.

சில உதாரணங்கள்.

நேயர் கேள்வி :- தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நீங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை குறைப்பீர்களா?

கருணாநிதி :- குறைப்போம்.

மாலனின் காமெண்ட் :- மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும். ஆனால், தமிழ்நாட்டில் மின்சார பில்லை பார்த்தாலே ஷாக்கடிக்கிறது.

--

நேயர் கேள்வி :- வாஜ்பாய், சோனியா, ஜெயலலிதா ஆகியோரிடம் உங்களுக்கு பிடித்தது என்ன?

கருணாநிதி :- வாஜ்பாய் - நட்பு (சரியாக என்ன சொன்னார் என்று ஞாபகம் இல்லை.) சோனியா - (என்ன சொன்னார் என்று எனக்கு மறந்து போச்சு.) ஜெயலலிதா - அதீதமான தன்னம்பிக்கை. (கருணாநிதி இப்படிச்சொன்னது எனக்கு தனிப்பட்ட முறையில் ரொம்பப் பிடித்திருந்தது.)

மாலனின் காமெண்ட் :- நீங்கள் அதீத தன்னம்பிக்கை என்று சொல்கிறீர்கள்; ஆனால் எனக்கென்னமோ அதிகப்படியான கர்வம் (அல்லது ஆணவம்) என்று தோன்றுகிறது.

--

நேயர் கேள்வி :- ஜெயலலிதா ஆட்சியில் உங்களுக்குப் பிடித்தது என்ன?

கருணாநிதி :- ஒன்றும் இல்லை.

மாலனின் காமெண்ட் :- ஜெயலலிதா ஆட்சியில் பிடிக்காத விஷயம் என்ன? என்று கேட்டால் பல விஷயங்களை பட்டியலிட முடியும். பிடித்த விஷயம் என்னவென்று கேட்டால் , என்னத்தை சொல்ல?

-------
இப்படி பல கேள்விகளுக்கு அதிகப்பிரசங்கித்தனமாக - தேவையில்லாத காமெண்ட்களை அள்ளி வீசிக்கொண்டிருந்தார். ஒரு ஒருங்கிணைப்பாளர் ( அல்லது பேட்டியாளர் ) இப்படி ஜால்ரா தட்டுவது - பத்திரிகை தர்மம் ஆகுமா? பேட்டி தர்மம் ஆகுமா என்று தெரியவில்லை.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.