Thursday, March 18, 2004

தொகுதி ரவுண்டப் (நம்ம தொகுதி)

பத்ரியின் யாருக்கு வாக்களிப்பது? பதிவுக்கு, நம்ம response. Comment section-ல நிறைய எழுத முடியாதுங்கறதுனால இங்க எழுதறேன்.

பத்ரி,

வேட்பாளர்கள் பத்திய விவரத்துக்கு உங்களுக்கு எந்த அளவுக்கு access இருக்குன்னு தெரியல.. அப்டி இருந்தா, இன்னும் கொஞ்சம் detailed-ஆ போனா நல்லா இருக்கும்.

நான் ஆதம்பாக்கம் (தென் சென்னை).

டி.ஆர்.பாலு - நீங்க சொன்னா மாதிரி விசேஷமா ஒண்ணும் செஞ்சா மாதிரி தெரியல. St. தாமஸ் மவுண்ட் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல சுரங்கப்பாதை புதுசா வந்திருக்கு. இதுனால, அந்த ரயில்வேகேட்ல காத்துக்கிடக்கற அவசியம் இனிமே இல்லை. இது ஒரு நல்ல விசயமா எனக்குப்படுது. இந்த சுரங்கப்பாதை சமாச்சாரம் வைஜெயந்தி மாலா காலத்துல அடிக்கல் நாட்டினதுன்னு நெனக்கறேன். இதே மாதிரி நங்கநல்லூர்-லயும் ஒரு சுரங்கப்பாதை இருக்கு (இது கொஞ்சம் பழசு).

ரெண்டாவது, கழிவுநீர் வடிகால் (Underground Sewerage) திட்டம் சமீபத்துல பண்ணியிருக்காங்க. இதுனால கொசுத்தொல்லை குறைஞ்சிருக்கு.

சமீபத்துல (கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் முன்னாடி) நங்கநல்லூர் போனப்போ, ரோடெல்லாம் படு மோசம். ரொம்ப நாளாவே அப்டித்தான் இருக்குன்னு கேள்விப்பட்டேன். இன்னமும் அப்டித்தான் இருக்குன்னு போன்ல சொன்னாங்க.

நான் ஒரு நாலு வருஷம தொகுதில இல்ல. ரெண்டு வருஷத்துக்கு ஒருவாட்டி ஒரு விஸிட்தான். அதுல நான் கவனிச்சது மேல சொன்னது.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.