Thursday, March 04, 2004

வேட்பாளர்கள் ஜாதகம் உங்கள் கையில் (2)

ஜாதகம்னு சொன்னேனே.. அது குத்து மதிப்பா இது போல இருக்கும்னு நெனைக்கிறேன்.

இது, குஜராத்ல 2002-ல நடந்த எலெக்ஷனுக்கு தயாரிச்சது. ஆனா, இந்த டாக்குமென்ட், வேட்பாளர்களோட குற்ற வறலாறு பத்தி மட்டும் தான் சொல்லுது.

ஆனா, முன்ன சொன்ன மாதிரி, நம்ம எலெக்ஷன் கமிஷன் இந்த எலெக்ஷனுக்கு தரப்போற விவரத்துல, சொத்து, படிப்பு அப்பறம் குற்ற விவரங்கள் மூணும் இருக்கும்.

அதத் தவிர, நம்ம வேட்பாளர்கள், அரசு நிறுவனங்களுக்கு (போன், தண்ணி, மின்சாரம், வீட்டு வரி) வெச்சிருக்கற பில்லு பாக்கியையும் வெளியிடுவாங்கன்னு நெனைக்கறேன். இந்த விவரங்கள அந்த அரசு நிறுவனங்களே, விளம்பரப்படுத்தணும்னும், உயர் நீதிமன்றம் சொல்லியிருக்கு.

ஆக, வேட்பாளர்கள் குடுமி மக்கள் கையில...
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, March 03, 2004

வேட்பாளர்கள் ஜாதகம் உங்கள் கையில்

தேர்தல் வரப்போகுதுல்ல.. அதுக்கு நம்ம உயர்நீதிமன்றம் ஒரு நல்ல காரியம் செஞ்சிருக்கு.

அது என்னன்னா.. "தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் பண்ணறவங்க எல்லாரும், அதுக்கான அப்பிளிக்கேஷனோட, தங்களோட ஜாதகத்தையும் தேர்தல் கமிஷன்ட்ட குடுத்துடணும்" - அப்படின்னு ரொம்ப கறாரா சொல்லிடிச்சு.

இது பொது மக்களுக்கு ஒரு வரப் பிரசாதம். எனக்கு ரொம்ப குஷியா இருக்கு.

சரி, அந்த ஜாதகத்தில் என்னவெல்லாம் இருக்கணும்?

சொத்து விவரம்.
படிப்பு விவரம்.
குற்ற விவரம்.

சரி, இந்த விவரத்த வேப்பாளர்கள் தேர்தல் கமிஷன்ட்ட குடுப்பாங்க. பொது ஜனத்துக்கு எப்படி கெடைக்கும்?

வேட்பாளர்களோட இந்த ஜாதகம் உங்களுக்கு வேணும்னா, நீங்க தேர்தல் கமிஷன்ட்ட சொச்சம் பணம் செலுத்தி வாங்கிக்கலாம்.

என்னோட ஐடியா என்னன்னா, நீங்க இத வாங்கி, கொஞ்சம் காப்பி போட்டு, அக்கம்பக்கத்துல விநியோகம் பண்ணுங்க. உங்களுக்கு புண்ணியமா போவும்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, March 02, 2004

ஒரு மன உறுத்தல் (பகுதி 2)

(பகுதி 1)

காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சிலர் தூக்கிலிடப்பட்டனர் (இதில் நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் ஆப்தே அடக்கம்.) சிலர் ஆயுள் தண்டனை பெற்றனர் (கோபால் கோட்சே மற்றும் சிலர்) சிலர் விடுவிக்கப் பட்டனர் (வீர் சவர்க்கர் போன்றோர்)

வீர் சவர்க்கர், 'ஹிந்து மகா சபா'வின் நிறுவனர். தலைவராக இருந்தவர்.

பூனேயில் 'ஹிந்து ராஷ்ட்ரா' என்ற பத்திரிகை நடத்திக்கொண்டிருந்த நாதுராம் கோட்சேயும், நாராயண் ஆப்தேயும், காந்தியை கொல்வது என்று முடிவெடுத்த பின், வீர் சவர்கரிடம் தான் வந்து ஆசீர்வாதம் வாங்கினர். அவரும், சென்று வாருஙள். வேலையை கச்சிதமாக முடித்து திரும்பி வாருங்களென்று வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

இவர்களை எல்லாம் பற்றிய விவரங்களை இன்டெர்னெட்டில் தேடிக்கொண்டிருந்த போது, ஒரு புகைப்படம் கண்ணில் மாட்டியது.

அது, பாராளுமன்றத்தில், வீர் சவர்க்கரின் படத்திறப்பு விழாவின் போது எடுக்கப் பட்டது. ஜனாதிபதி அப்துல் கலாம் உட்பட, பிரதமர் வாஜ்பாய் மற்றும் பலர் அந்த புகைப்படத்தில் இருந்தனர்.

" 'இந்தியா இரண்டாக ஒரு நாளும் நான் அனுமதிக்க மாட்டேன். அது என் பிணத்தின் மீது தான் நடைபெறும்' என்று காந்தி சொன்னார். இந்தியா பிளவு பட்டுவிட்டது ஆனால் காந்தி உயிரோடு தான் இருந்தார். அதனால் நாங்கள் போட்டுத் தள்ளி விட்டோம்" - என்று கோபால் கோட்சே சிக்கனமாகச் சொன்னாலும், அவர்கள் காந்தியை கொன்றதற்க்குக் காரணம் - அவர் முஸ்லிம்கள் பக்கம் சாய்கிறார். முஸ்லிம்களுக்கு பாதுகாவலனாக இருக்கிறார். ஹிந்துக்களை - முஸ்லிம்களுக்கு இறையாகச் சொல்கிறார். என்ற அவர்களின் வாதம் தான் காரணம்.

காரணம் எதுவாயினும், தேசத்தின் தந்தையாக நாடு ஏற்றுக்கொண்டுவிட்ட ஒருவரின் கொலைத்திட்டத்தில் பங்கு கொண்ட ஒருவரின் (வீர் சவர்க்கர்) படத்தை பாராளுமன்றத்தில் வைக்கலாமோ?

இது தான் என் மன உறுத்தல்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, March 01, 2004

இன்றைய பங்கு கைமாற்றம்

vtss : விற்ற விலை : 8.49
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

இன்றைய மோதல்(கள்)

பள்ளி சென்று திரும்பிக்கொண்டிருந்த ஏழு வயது ராஜாவை செங்கனி அம்மன் கோயில் தெருவில் (அம்பத்தூர்) ஒரு லாரி மோதியதில் ராஜா உயிர் இழந்தான்.

சென்னையில் சிறார்களை ஸ்கூல் வேன் ஏற்றித்தான் கொல்வது வழக்கம். ஒரு மாற்றத்திற்க்காக இன்று லாரி மோதியிருக்கிறது.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

ஒரு மன உறுத்தல் (பகுதி 1)

நாதுராம் கோட்சே இரண்டு நாள் முன்பு தான் முதல் முறையாக துப்பாக்கியை தொட்டிருக்கிறார்.

அன்று - கோட்சே, நாராயண் ஆப்தே மற்றும், விஷ்ணு கர்காரே மூவரும் பிர்லா மந்திருக்குப்பின் இருக்கும் ஒரு காட்டுப்பகுதியில் துப்பாக்கியை பரிசோதித்துப் பார்த்தனர்.

ஆப்தே, காந்தி மேடை மீது அமர்ந்திருந்தால் என்ன உயரம் வருமோ அந்த உயரத்தில் மரத்தில் ஒரு கோடு போட்டான். கோட்சே இருபது இருபத்தைந்து அடி தள்ளி நின்று சுட்டான். குறி தவறவில்லை.

ஜனவரி 30 1948 அன்று பிர்லா மாளிகையில், காந்தி தன் பேத்திகள் மனு மற்றும் ஆபாவுடன் கூட்டத்திற்க்கு நடந்து வந்தார். கோட்சே, காந்திக்கு மிக அருகில் வந்து, காந்தியின் காலில் விழுவது போல் பாவனை செய்தான். பின்பு இடக்கையால் மனுவை - தான் சுடப்போகும் குண்டு அவள் மீது பட்டுவிடாதபடி அப்புறம் தள்ளினான். பின்பு காந்தியின் மார் நோக்கி சுட்டான். பலமுறை.

காந்தி 'ஹே ராம்' என்று உச்சரித்து பின் விழுந்து இறந்தார்.
("அவ்வளவு அருகிலிருந்து - அந்த துப்பாக்கியால் சுடப்பட்டால், உயிர் பொட்டென்று போய் விடும். ஹே ராம் என்றெல்லாம் சொல்லியிருக்க வாய்ப்பில்லை"- என்கிறார் கோபால் கோட்சே. நாதுராம் கோட்சேயின் சகோதரர்.)

"நான் ஒரு மகாத்மாவே அல்ல. ஒருக்கால் நான் சுடப்பட்டால், நான் இறக்கையில், ராம நாமத்தை உச்சரித்துக்கொண்டு இறந்தேனானால், நான் மகாத்மா என்று ஊர் சொல்லட்டும்" என்று காந்தி பல முறை கூறியிருக்கிறார்.

காந்தியை மகாத்மாவாக்க சிலர் இந்த 'ஹே ராம்' கதையை சொல்லியிருக்கலாம். ஆல்லது அது உண்மையாகவும் இருக்கலாம்.

நான் சொல்ல வந்தது அதைப்பற்றி அல்ல.... (அடுத்த பதிவில்..)
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.