Friday, February 27, 2004

இன்றைய பங்கு கைமாற்றம்

csco : வாங்கு விலை 23.189
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

இன்றைய மோதல்(கள்)

மேற்கு வங்காளம்.
அதிகாலை 5 மணி.
லாரியில் திருமண கோஷ்டி.
ஆளில்லாத லெவல் க்ராஸிங்.
மின்னல் வேகத்தில் கஞ்ஜன் ஜங்கா எக்ஸ்பிரஸ்.
20 பேர் மரணம், 45 பேர் காயம்.

இது பெரம்பலூர்.
சென்னை திருச்சி நெடுஞ்சாலை.
இதுவும் திருமண கொஷ்டி.
காருடன் லாரி மோதியது.
சாவு 2 - காயம் - 11.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, February 26, 2004

நஜ்மா உடைச்சா மண் குடம் ; ஜோகி உடைச்சா வெண்கலக்குடம்.

லஞ்ஜம் கொடுத்து மாட்டிக்கொண்ட முன்னாள் சட்டிஸ்கர்க் முதல்வர் அஜித் ஜோகியை மன்னித்து மறுபடியும் தேர்தல் பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைத்ததை படித்திருப்பீர்கள்.

இன்று அதே சோனியா காந்தி, நஜ்மா ஹெப்துல்லா சம்பந்தப்பட்ட சர்ச்சை குறித்து இப்படி சொல்லியிருக்கிறார் - "காங்கிரஸ் ஒரு லட்சியவாத இயக்கம். அந்த லட்சியத்தில் நம்பிக்கையில்லாதவர்கள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு அதில் இடம் இல்லை"

நஜ்மா ஹெப்துல்லா குறித்த சர்சசை என்னவென்று சரியாகத் தெரியவில்லை.
என்றாலும் , சோனியா சமயத்திற்க்கேற்றவாறு நடந்து கொள்கிறார்!!
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, February 25, 2004

தமிழ் வழக்கில் க்லீஷேக்கள் (Cliche)

Cliche என்பதற்கு dictionary.reference.com தரும் விளக்கம்

cli·ché also cliche ( P ) Pronunciation Key (kl-sh)
n.
A trite or overused expression or idea: “Even while the phrase was degenerating to cliché in ordinary public use... scholars were giving it increasing attention” (Anthony Brandt).

தமிழ் வழக்கில் ஏதாவது 'க்லீஷே'க்கள் உண்டா என்று யோசித்ததில் எனக்கு தோன்றியவை

[1] நண்பன் ஒருவன் முடி வெட்டிக்கொண்டு வரும்போது சக நண்பன் அல்லது நண்பர்கள் சொல்வது "தலைய எந்த பொந்துக்குள்ளடா வுட்ட?"

[2] ரெண்டு பேர் டிவி பாத்திடிருப்போம் - டிவி-ல ஒரு குரங்கு வரும்.. உடனே இவன், " டேய் உன் friend பாருடா!"

[3] வீட்டு பெரிசு "டேய் என்னடா லீவு விட்டாச்சா? இனிமே அவுத்து வுட்ட கழுதை தான்!"
----
உங்களுக்கும் ஏதாவது தமிழ் 'க்லீஷே' தோன்றினால் சொல்லுங்கள்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

மானங்கெட்ட சோனியா காந்தி வெக்கங்கெட்ட அஜித் ஜோகி

காங்கிரசை சேர்ந்த அஜித் ஜோகி பிஜேபி எம்.எல்.ஏ-க்களுக்கு லஞ்ஜம் கொடுக்க முயற்ச்சித்து,
ஆடியோ டேப் ஆதாரம் மூலம் கையும்-லஞ்ஜமுமாக சில மாதம் முன் பிடி பட்டார்.

பின்பு அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைக்கால நீக்கம் செய்யபட்டார்.

இன்று, அவரை, காங்கிரஸ் - வரவிருக்கும் தேர்தலுக்கு ப்ரச்சாரம் செய்ய அழைத்திருக்கிறது.

ஜோகி - தன்னை மீண்டும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளும்படி கெஞ்ஜினாராம். சோனியா அழைத்தாராம்.

இந்தியாவில் லஞ்ஜம் பெரிய பிரச்சினையாக இருக்கும் இந்த நேரத்தில், சோனியா காந்தி - 'லஞ்ஜம் மன்னிக்கப் படக்கூடிய குற்றம் தான்' - என்பது போல் நடந்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

மானங்கெட்ட சோனியா காந்தி வெக்கங்கெட்ட அஜித் ஜோகி!!

(தேர்தல் ப்ரச்சாரத்தின் போது, பொது மக்கள் இருவர் மீதும் முட்டையும், தக்காளியும் வீசுவார்கள் என்றும் நம்புவோம்! )
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, February 24, 2004

இன்றைய மோதல்(கள்)

வலநாடு அருகே ஒரு எண்ணை டாங்கர் , திமுக தொண்டர்கள் சென்று கொண்டிருந்த வேனை பின்னிருந்து மோதியதில், வேனிலிருந்த திமுக தோண்டர்கள் மூவர் காயமுற்றனர் ஓட்டுனர் இறந்தார்.

(வரவிருக்கும் தேர்தலில் திமுக முன்னூறு ஓட்டுக்களை இழந்து விட்டதாக, உள்ளூர் தலைவர் வருத்தம் தெரிவித்தார்.)
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, February 23, 2004

கலைஞர்களுக்கு எதுக்கு உதவித்தொகை?

நலிந்த கலைஞர்களுக்கு, தமிழக அரசு வாழ்நாள் உதவித்தொகை அளிக்கப்படுவது கண்டு மகிழ்ச்சியும் அதே சமயம் அதிர்ச்சியும் உற்றேன்.

மகிழ்ச்சி, அரசின் நல்லெண்ணத்திர்க்கு.

எனக்கிருக்கும் உறுத்தல் என்னவென்றால், நலிந்த கலைஞர்களுக்கு (நாடக, சினிமா) உதவி புரிய, ஏன் மக்களின் வரிப்பத்தை உபயோகிக்க வேண்டும் என்பது தான். அவர்கள் என்ன நாற்று நட்டார்களா? களை புடுங்கினார்களா? நாட்டின் எல்லைக் கோட்டில் உயிரை பணயம் வைத்து மக்களைக் காத்தார்களா? அல்லது ஏழை மக்கள் வாழ்வு முன்னேற, அவர்தம் நாட்களை அற்ப்பணித்தார்களா?

நாடக கலைஞர் , திரை கலைஞர் என்பது ஒருவரது தொழில். அவர்களும், டாக்டர் தொழிலாளி போல், கட்டட தொழிலாளி போல், ஒரு தொழிலாளி. மேற்சொன்ன துறையில் இருப்பவர்கள் நலிவுற்றால் அரசாங்கம் உதவி புரியுமோ? பின் ஏன் கலைஞர்களுக்கு மட்டும் இந்த பாரபட்சம்?

கலைகளை வளர்க்க வேண்டுமானால், அரசு நடத்தும் கலை விழாக்களில் அவர்களுக்கு வாய்ப்பளிக்கட்டும். வெளி மாநில மற்றும் வெளிநாட்டு கலை விழாக்களில் அவர்கள் பங்கேற்க்க ஆவன செய்யட்டும். அதை விட்டு விட்டு, உதவித்தொகை கொடுத்தால் என்ன புண்ணியம்? அதுவும் வாழ்நாள் முழுதும்? 500 பேருக்கு தலா மாதம் ரூ.500 வீதம் இது வருடத்துக்கு மட்டுமே 30 லட்சம்.

இது மக்கள் பணம். மக்களுக்கு இதில் உடன்பாடு உண்டோ? யாருக்கும் தெரியாது. அதை தெரிந்து கொள்ள நம் அரசியல் அமைப்பில் வ்ழி-வகை இல்லை. அமெரிக்காவில் 'ப்ராப்பஸிஷன்' என்கிறார்கள். ஒவ்வொரு முக்கிய தீர்மானத்திற்க்கும் ஒரு 'ப்ராப்'. மக்கள் ஓட்டளிக்கிறார்கள்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

மருத்துவமனைகளில் டிவி பெட்டிகள் தேவையா?

இன்று தான் படித்தேன் - ஆனால் எங்கு படித்தேனென்று மறந்துவிட்டேன்.
டாக்டர்களும், நர்ஸ்களும் கூடி 'மெட்டி ஒலி' ஆர்வமாக பார்த்துக்கோண்டிருந்த காரணத்தால், அவசர சிகிச்சை தேவைப்பட்ட நோயாளியை ஏனோ-தானோவென்று கவனித்தார்களாம்.

மருத்துவமனைகளில், டிவி பெட்டிகள் தேவையா?
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

இன்றைய மோதல்(கள்)

திருநெல்வேலி. தமிழக அரசுப்பேருந்தும், சட்டிஸ்கர்க் மாநில சுற்றுலா பேருந்தும் மோதியதில், 4 பேர் இறந்தனர், 46 பேர் காயம். கோயம்பத்தூர் அருகிலுள்ள கன்னியூரில் காரும், லாரியும் மோதியதில், 3 பேர் இறந்தனர் (மூவருமே 50 வயதிற்க்கு ம்குந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.)
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

தமிழ் ஆட்சி மொழி ஆவதால் யாருக்கென்ன பயன்?

சில நாட்கள் முன் கருணாநிதி , வரவிருக்கும் தேர்தல் குறித்து பேசும்போது, தமிழை ஆட்சி மொழியாக்க பாடுபடப்போவதாக் கூறியிருக்கிறார்.

தமிழ் ஆட்சி மொழி ஆக்குவதால் யாருக்கு என்ன பயனென்று தெரியவில்லை.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.