Tuesday, November 09, 2004

மக்கள் வரிப்பணத்தில் சிவாஜிக்கு சிலை?

தமிழ் திரைப்பட உலகம் தமிழக முதல்வருக்கு எடுத்த பாராட்டு விழாவில், சிவாஜிக்கு சிலை வைக்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் நடிகர் கமலஹாசன் கோரிக்கை வைத்துள்ளார். (நன்றி-விகடன்) (சிலை வைக்க இடம் கேட்டாரா? பணம் கேட்டாரான்னு தெரியலை.)

இருக்கிற சிலைகளாலேயே ஏகப்பட்ட சண்டைகள். இதுல இன்னொண்ணு தேவையா?

அதோட, சிவாஜிக்கு சிலை வைக்கணும்னு அவருக்கு ஆசையிருந்தா, அவரு சொந்த செலவுல வைக்கட்டும்.. அல்லதும் நடிகர் சங்கக் பணம் கலெக்ட் பண்ணி வைக்கட்டும்.. அத வுட்டுட்டு எதுக்கு மக்கள் வரிப்பணத்துல கை வைக்க நினைக்கணும்?
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

6 Comments:

Blogger Arun Vaidyanathan said...

அன்புள்ள ஹரி,
நடிகர் திலகம் ஒரு மாபெரும் நடிகர். அந்த நடிகருக்காக மக்களின் வரிப்பணம் செலவிடப்படுகிறதென்றால், மக்களில் பெரும்பான்மையானோர் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என்று திண்ணமாக நம்புகிறேன். எத்தனையோ ஜாதித் தலைவர்களுக்கு சிலை இருக்கிறது...அவர்கள் பெயரில் தெருக்கள் இருக்கிறது. பொது வாழ்க்கையிலும், தனிவாழ்க்கையிலும் சற்று கூட நேர்மையைக் கடைபிடிக்கத் தவறியவர்கள் பெயரில் எல்லாம் நமது நாட்டில் பல விஷயங்கள் பரவிக் கிடக்கிறது. ஆனால், நடிப்பு எனும் துறையில் பல சிகரங்களைத் தொட்ட சிவாஜிக்கு சிலைவைக்கும் போது, இது போன்ற கேள்விகள் எழுப்பப்படுவது மிக மிக வருத்தமாய் உள்ளது. சிவாஜி, அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்டு நல்ல நடிகர் என்பதைப் பெரும்பாலானோர் ஒத்துக் கொள்வர். கலைத்தாயின் தவப்புதல்வன் பற்றிய சரித்திரம் கண்டிப்பாய் ஏதேனும் ஓரிடத்தில் பொறிக்கப்பட்டே ஆக வேண்டும். எத்தனையோ முறை நாட்டின் நலத்துக்காக நாடகங்கள் நடத்தி பணம் திரட்டிக் கொடுத்தவர் சிவாஜி கணேசன். நட்போடு சொல்கிறேன்.....தயவு செய்து இது போன்றதொரு பதிவு போடுவதற்கு முன் கொஞ்சம் சிந்தியுங்கள்.

- அருண் வைத்யநாதன்

1:24 PM  
Blogger புலம்பல்ஸ் said...

சிவாஜியின் திறமை குறித்தெல்லாம் எனக்கு சிறிது கூட சந்தேகமில்லை.
ஆனால் அரசாங்கம் இதைச்செய்ய வேண்டுமா என்பது தான்...
அரசாங்கத்தோட கடமை என்ன? மக்களுக்கு நல வாழ்வளிப்பது.. மக்கள் நலம் பேணுவது இத்யாதி இத்யாதி. மக்கள் ஒரு அரசை ஓட்டளித்து தேர்ந்தெடுப்பது அதற்குத் தான். மக்கள் வரி கட்டுவதும் அதற்குத் தான். சிவாஜிக்கு சிலை வைப்பது அரசின் கடமையா? வேலையா. (இதுக்கு எவ்வளவு செலவாயிடப்போவுது? இதுக்கு தமிழ் நாட்டில் யாரும் மறுப்பு சொல்ல மாட்டார்கள்? என்பதைத் தாண்டி ஒரு கொள்கை அடிப்படையில் பாருங்கள். Its a question of principle.)

யார் யார் பெயர்லயோ சிலை இருக்குது.. தெரு பெயர் இருக்குதுன்னு சொல்றீங்க. நீங்க சொல்லுறது. கரெக்ட் தான். இருக்கு தான். மனசுக்கு வேதனையா இருக்குது தான். என்ன பண்ணச்சொல்றீங்க?

நடிகர் சங்கத்துக்கு நிறைய கடன் இருந்தது. அத அரசாங்கம் அடைச்சிருந்தா ஒத்துக்கிட்டிருப்பீங்களா? ஏன்? தமிழ்த் திரைப்பட உலகம் உலகெல்லாம் இருக்கும் தமிழர்களை 50 வருஷத்துக்கும் மேல என்டெர்டெயின் பண்ணிட்டு வராங்களே? அரசாங்கமே அந்த கடன அடைச்சிருக்கலாமே? எதுக்கு அவங்க சிங்கப்பூரெல்லாம் போயி நிதி திரட்டினாங்க? (கண்ணதாசனுக்கு சிலை வைக்க எம்.எஸ். விஸ்வநாதன் சொந்தமா தான் நிதி திரட்டினதா ஞாபகம்.) அரசாங்கம் வேறு. பொழுது போக்கு சாதனங்கள் வேறு.

6:46 PM  
Blogger ராம்கி said...

சிலை வைக்கணுமா அதுவும் அரசு செலவில் வைக்கணுமான்னு ரெண்டு கேள்வி நறுக்குன்னு கேட்டிருக்கீங்க! இப்ப இருக்குற தலைவர்க மண்டையை போட்டா, இதே மாதிரி கேள்விங்க ரெண்டுபேரு கேட்டா, நெசமாவே சந்தோஷந்தான்!

1:12 AM  
Anonymous Anonymous said...

என் மருமவனுக்கு(சுள்ளான்) ஒரு சிலை திறங்க ஜெ.ஜெ மேடம்! உங்ககிட்டதான் அந்த தைரியம் இருக்கு.

பரட்டை(இதெப்படி இருக்கு).

6:08 AM  
Blogger ஜோ / Joe said...

¦Ã¡õÀ ¿øġ¢ÕìÌ!

Áì¸ÙìÌ ºõÀó¾õ þøÄ¡¾ ¡áÕ째¡ «Ãº¡í¸õ º¡÷À¢ø º¢¨Ä¸Ùõ Áñ¼Àí¸Ùõ ±ØôÀôÀÎõ ¿¡ðÊø,´Õ þÉò¾¢ý ¸¨Ä ¸Ä¡îº¡Ãò§¾¡Î ¸ÄóÐ ,ÅÃÄ¡üÈ¡ø ÒÈó¾ûÇ À¼ ÓÊ¡¾ ´Õ ´ôÀüÈ ¸¨ÄÁ¸ÛìÌ Á⡨¾ ¦ºöž¢ø ±ýÉ ¾ÅÚ?

³Â¡!¾í¸¨Çô §À¡ýÈ ÀÊò¾ §Á¾¡Å¢¸ÙìÌ §ÅñΦÁýÈ¡ø «Åâý ¾É¢îº¢ÈôÒ ¦¾Ã¢Â¡ÁĢոġõ ..¬É¡ø ±ò¾¨É§Â¡ ¸øÅ¢ÂȢŢøÄ¡¾ÅÕìÌ ,§¾º¢Âõ,ÅÃÄ¡Ú ,¦Á¡Æ¢ ,¬ýÁ£¸õ º¡÷ó¾ ¸Õòи¨Ç À¢õÀí¸¨Ç Áɾ¢ø À¾¢Â ¨Åò¾ Á¨ÈÓ¸ ¬º¢Ã¢Â÷ ¿õ ¿Ê¸÷ ¾¢Ä¸õ .«ÅÕìÌ º¢ÈôÒ ¦ºö þó¾ «Ãº¡í¸¦ÁýÉ ,þó¾ ¾Á¢ú ºÓ¾¡Â§Á ¸¼¨Á ÀðÊÕ츢ÈÐ!

¿ñÀ÷ «ÕÏìÌ ¿ýÈ¢!

¿ñÀ÷ âɢ áõ¸¢Â¢ý ²§É¡ ¾¡§É¡ ¸ÕòÐ ²Á¡üÈÁǢ츢ÈÐ.

- Á¢ø¼ý

10:56 PM  
Anonymous Anonymous said...

அவர் ஏதோ நிம்மதியா போய்ட்டார். இனி இவ்ர் தலையில் காக்கா உக்காரணுமா?

11:42 AM  

Post a Comment

<< Home