Tuesday, October 19, 2004

வீரப்பனால் பொது ஜனத்துக்கு எந்த தொல்லையும் கெடயாது ஸார்.

கருத்துக்கள் - மாற்றுக்கருத்துக்கள்

பிபிசி தமிழோசை நிகழ்ச்சியின் மூலம், வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் வீரப்பன் குறித்த பலரின் கருத்துக்கள் மற்றும் மாற்றுக்கருத்துக்கள் கேட்க முடிகிறது.

http://www.bbc.co.uk/tamil/2115.ram

http://www.bbc.co.uk/tamil/institutional/programmes.shtml

"மனித உரிமைக்காரங்க ஏதாவது சொல்லிட்டுத் தான் இருப்பாங்க. அதையெல்லாம் கேட்டுட்டிருந்தா வேலை பண்ண முடியாது." - வால்டர் தேவாரம்

"அவசரப்பட்டு STF க்கு பரிசெல்லாம் அரிவிச்சிருக்காங்க" - பீப்பில்ஸ் வாட்ச்

"ஒரு வீரருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த வந்திருக்கோம்"

"நூறு பேர் இருக்காங்க. நாலு பேர உயிரோட புடிக்க முடியலையா?"
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

8 Comments:

Blogger Raja Ramadass said...

மனித தன்மையில்லாமல் கொலை செய்தவனுக்கும் மனித உரிமை மீறல் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. 100 கொலைகளுக்கு மேல் செய்தவனுக்கு என்ன தண்டனை.

2:35 AM  
Blogger புலம்பல்ஸ் said...

மனித உரிமை மீறல் என்பதல்ல. உயிருடன் பிடிக்க வாய்ப்பிருக்கும் போது பிடித்திருக்கலாமே என்பது தான்.

ஆம்புலன்ஸ் வேன் நம்ம வேன். ஓட்டுனரும் நம்மாளு தான்.
அட, டெக்னாலஜி எவ்வளவு முன்னேறி இருக்கு... அந்த வேன்லயே அவங்கள செயலிழக்கச் செய்ய ஏதாவது ஸெட்டப் பபண்ணியிருக்கலாமே?

STF க்கு எனக்கிருக்கும் கேள்விகள்,

[1] வீரப்பனை உயிரோடு பிடிக்க ஏதாவது திட்டம் வைத்திருந்தீர்களா? அல்லது அது ஒர்க்கவுட் ஆவலியா?

[2] சரணடையச் சொன்னோம். அவன் சரணடையலன்னு சொல்லறீங்களே? (What else did you expect?) 'மயிலே மயிலேன்னா இறகு போடுமா?'

8:16 AM  
Anonymous Anonymous said...

raja ramadoss,
appa rajiniyaiyumla suttu kollanum avarum ponnu illama raathiri thungarathu illanuu kumudam la interview kotukuraan

6:14 PM  
Blogger Moorthi said...

ஹரியண்ணா சொன்ன கருத்தும் ஏற்புடையதே.. ஓட்டுநர், வேன் என எல்லாமும் படையினுடையது. மயக்கம் வரவழைக்கும் வாயு அல்லது கண்ணீர்ப்புகை குண்டுகளைப் பயன்படுத்தி அவர்களை நிலை குலையச் செய்து கால்களிலாவது சுட்டு உயிருடன் பிடித்து விசாரனை மேற்கொண்டிருக்கலாம்தான். ஆனால் ஒருவேளை உயிருடன் பிடிபட்டு இருந்தாலும் வழக்கு முடிய பல வருடங்களாகும். ஆட்சிகள் மாறலாம். பல தலைகளுக்கு இந்த வழக்கு சிம்ம சொம்மணமாக இருக்கும்.

எல்லாவற்றையும் கருத்தில்கொண்டுதான் போட்டுத்தள்ளிவிட்டார்கள்!

9:27 PM  
Blogger புலம்பல்ஸ் said...

This comment has been removed by a blog administrator.

9:41 PM  
Blogger புலம்பல்ஸ் said...

மூர்த்தி, நீங்கள் சொல்வது புரிகிறது.
ஒவ்வொரு நாளும் புதிது, புதிதாக தகவல்கள் (வதந்திகள்?) வந்து கொண்டிருக்கிறது.
வேனில் காமெரா வைத்திருந்தார்கள் என்றும், அவன் கொல்லப்படவில்லை. தற்கொலை செய்து கொண்டான் என்றும், பலவிதமாக.

Ifs and Buts நிரையத் தான் இருக்கும். என்ன செய்யிறது? நடந்தது நடந்து போச்சு.

9:43 PM  
Blogger புலம்பல்ஸ் said...

அய்யா அனானிமஸ், என்ன சொல்ல வர்ரீங்க? ரஜினிக்கும் வீரப்பனுக்கும் என்ன சம்பந்தம்? மண்டைய பிய்ச்சிக்க வெய்க்கிறீங்களே?

9:44 PM  
Blogger மாயவரத்தான்... said...

//ரஜினிக்கும் வீரப்பனுக்கும் என்ன சம்பந்தம்? மண்டைய பிய்ச்சிக்க வெய்க்கிறீங்களே?//
என்ன ஹரியண்ணா.. புரியாம பேசுறீங்க..?! வீரப்பன் அனானிமஸோட 'மணவாடு'.. அதனால அவன் என்ன தப்பு பண்ணினாலும் அது தப்பே இல்லை.. ரஜினி, வீரப்பனை 'ராட்சதன்' அப்படீன்னு சொன்னவரு! கூட்டி கழிச்சி பாருங்க.. கணக்கு ரொம்ப சரியா வரும்!

8:17 AM  

Post a Comment

<< Home