Monday, October 11, 2004

தமிழக முதல்வர் - கரன் தப்பார் பேட்டி

தமிழக முதல்வர் - கரண் தப்பார் பேட்டி : கருத்துக்கள்

1. முதல்வர் அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகம்னு பல பேர் சொல்லி கேட்டிருக்கேன். அது உண்மை இல்லைன்னு தெரியுது. ஜோசியம், ந்யூமராலஜில நம்பிக்கை இருக்குது. ஆனா, அத ஒத்துக்க தைரியம் இல்லை. (அதையெல்லாம் நம்புறது கேவலமானதுன்னு நெனைக்கறாங்க போல..) அப்படி இருக்கறவங்களப் போயி தன்னம்பிக்கை உள்ளவங்கன்னு சொன்னா நம்ப முடியுதா? (அதாவது, தன் நம்பிக்கைகளின் மீதே நம்பிக்கை இல்லாதவர்).

2. ஜனநாயகத்துல நம்பிக்கை இல்லாதவங்க : அமைச்சரவைய நான் இஷ்ட்டத்துக்கு மாத்துவேன். அதக்கேக்க யாருக்கும் உரிமை கெடையாதுன்னு சொல்லுறது ஜனநாயகமா?

3. ரொம்ப சில்லறைத்தனமானவங்க : நீ மட்டும் பேப்பரப் பாத்துப் படிக்கறியே!?

4. குறைந்த பட்ச பண்பாடு கூட இல்லாதவங்க : அரசியல் எதிரியாகவே இருந்தாலும் நல்ல நட்பு பாரட்டி வாழ்ந்தவர்கள் தமிழகத்தில் உண்டு. சாதாரண ஒரு பேட்டியாளர் ஏதோ நாலு கேள்வி கேட்டுட்டான்றதுக்காக (அவர் தொழிலே கேள்வி கேக்குறது தான் !!) "உங்களை சந்திததில் எனக்கு சந்தோஷம் இல்லை" அப்டின்னு சொல்லிட்டாரு. இவங்கள்ளாம், என்னத்த அரசியல் நடத்தி, என்னத்த நாடு முன்னேறி!!

எனக்கு புரியாதது என்னன்னா, இந்த பேட்டியப்பத்தி, வேற எந்த செய்தித்தாளும் செய்தி (அ) கருத்து வெளையிட்டா மாதிரி தெரியலை. (அப்டியே பாய்ஞ்சி கிழி கிழின்னு கிழிச்சிருக்க வேண்டாமா?)

குறிப்பா சன் டிவி இதப்பத்தி வாயத்திறந்த மாதிரி தெரியலை. (இம்புட்டுக்கும், கருணாநிதிய கைது பண்ணினப்போ, சன் டிவி காட்டுன வீடியோ வெறும் டகால்டின்னு இந்த பேட்டில சொல்லியிருக்காங்க.)
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

Blogger சுந்தரவடிவேல் said...

//வேற எந்த செய்தித்தாளும்...//
ஆமா, அவங்க யாரும் செய்யாத காரியத்தை பிபிசி செஞ்சிருக்கே, எப்படி எழுதுவாங்க. ரிடிப் கூட ஏனோ தானோவென்று நாலு வரியில் சோனியா விஷயத்தைப் பற்றி மட்டும் எழுதிவிட்டு முடக்கிவிட்டது. ஒரு முதல்வரை நேருக்கு நேராக் கேள்வி கேட்கக் கூட நமக்கு வெள்ளைக்கார முத்திரை தேவைப் படுது.

2:52 AM  
Blogger ரா.சு said...

"தங்கத் தாரகை" ஜெ.ஜெ யிடம் இந்த செவ்விப் பற்றி "சில குறிப்புகள்" வாங்க தைரியமில்லாத விகடன் கரண் தப்பாரிடம் செவ்வி வாங்கி வெளியிட்டுள்ளது.

http://www.vikatan.com/av/2004/oct/17102004/av0102.htm

9:29 PM  

Post a Comment

<< Home