Tuesday, August 03, 2004

பான்பராக்கும் குட்காவும்

"பான் மசாலா, குட்கா போன்ற பொருட்களுக்கு தடை விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு கிடையாது மத்திய அரசுக்குத்தான் உண்டு. மத்திய அரசு உணவு கலப்பட தடை சட்டத்தின் கீழ் இந்த பொருட்களை தடை செய்ய முடியும்.

மாநில அரசின் உணவு சுகாதாரத்துறையின் அதிகாரம் சொற்ப காலத்துக்கானது தான் உள்ளூரில் நெருக்கடி ஏற்படும்போது அதை குறிப்பிட்ட காலத்துக்கு பயன்படுத்தலாம்.

மாநில அரசுகளே தடை விதிக்கும்போது ஒரு மாநிலத்தில் சுகாதாரத்துக்கு கேடாக கருதப்படும் பொருள் இன்னொரு மாநிலத்தில கேடு அற்றதாக கருதப்படும். இது முரண்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்.

எனவே மாநில அரசின் அதிகாரம் உள்ளூரில் சிறிது காலத்துக்கே அமுலில் இருக்ககூடிய வரையறை கொண்டதாகும். மத்திய அரசின் அதிகாரப்படி இந்த பொருட்களுக்கு நிரந்தர தடைவிதிக்க முடியும்.

எனவே பான்மசாலா குட்காவுக்கு தடைவிதித்து தமிழகம், ஆந்திரா, மராட்டியம், கோவா மாநில அரசுகள் பிறப்பித்த உத்தரவு செல்லாது அதை ரத்து செய்கிறோம்."

அப்டீன்னு, உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கு.

இது சுத்த கேனத்தனமா இருக்கு. மாநில அரசு சுயமா ஒரு நல்லது செய்யக்கூடாதாம். மத்திய அரசு கிணத்துல குதிச்சாத்தான் மாநில அரசும் குதிக்கணுமாம். இந்த கேனத்தனமான சட்டத்த எவன் போட்டான் தெரியல. அப்புறம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேர்தல் எதுக்கு ஒரு முதல்வர் எதுக்கு?

மாநில அரசு சுயமா, மதுக்கடை நடத்தலாமாம். லாட்டரிய தடை செய்யலாமாம். பொது இடத்துல புகை பிடிக்கத் தடை விதிக்கலாமாம். ஆனா பான் பராக் சாப்ட்டு அங்கங்க துப்பாதீங்கடா!! கான்ஸர் வந்து சாவாதீங்கடான்னு சொல்லக்கூடாதாம்.

செய்தி - நன்றி : தினகரன்
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home