Monday, August 02, 2004

தெருநாய்களின் உபத்திரவம்

எங்க அக்கா மெட்ராஸ்ல வேலை பாத்திட்டிருக்காங்க. அவங்க கூட வேலை பாத்த ஒருத்தர் ஒரு வாரம் முன்னாடி செத்துப் போயிட்டாராம். ஸ்கூட்டர்ல போயிட்டிருக்கும்போது குறுக்கால ஒரு நாய் ஒடிச்சாம். ஆது மேல ஏத்திறக்கூடாதேன்னு அப்டி இப்டி போனவரு, வண்டியோட விழுந்து மண்டையில அடி பட்டு அங்கயே இறந்துட்டாரு. ரொம்ப சோகம்.

இது நடந்திருக்க வேண்டியதேயில்ல. கார்ப்பரேஷன் ஒழுங்கா தன் வேலைய செஞ்சிருந்தாலே இத தவிர்த்திருக்கலாம். சென்னை கார்ப்பரேஷனுக்கு எதிரா ஒரு கேஸ் போட்டா கண்டிப்பா ஜெயிக்கும். அந்த அளவுக்கு இது அவங்களோட தப்பு.

எங்கப்பா ஒரு வாட்டி ராத்திரி கடைக்கு போயிட்டு வரும்போது - தெருல வெளிச்சம் இல்லாததனால தூங்கிட்டிருந்த ஒரு நாய மிதிச்சிட்டாரு. நல்ல வேளை கடிக்கல. தெரிச்சி ஓடிடிச்சி. அப்புறம் எங்க அக்கா பொண்ண ஒரு நாள் கோயிலுக்கு போயிட்டிருக்கும் போது ஒரு நாய் கடிச்சிடிச்சு. நெறைய ஊசி போட்டாங்க.

இப்படி கேப்பாரில்லாம வீதியில சுத்தற நாய்ங்கனால பல பிரச்சினைகள் பாத்திருக்கேன்.

"இங்க தான் சுத்திட்டிருக்கும். ஆனா கார்ப்பரேஷன் வண்டி வந்தா ஒண்ணும் கண்ணுல படாது" -ன்னு எங்க அம்மா சொல்லுவாங்க.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

3 Comments:

Blogger Badri said...

போன சனிக்கிழமை நெய்வேலி போய்விட்டு வரும்போது கிழக்குக் கடற்கரைச் சாலையில் என் கார் ஒரு நாய் மீது ஆக்ரோஷமாக மோத வேண்டி வந்தது.

நாலைந்து நாய்கள் தெருவில் அங்கிமிங்குமாக ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன. பொதுவாகவே என் டிரைவர் மிகவும் பொறுமையாக ஓட்டுபவர். இந்த நாய்கள் நாலைந்தும் ஒரு கோடியிலிருந்து அடுத்த கோடிக்கு குறுக்காக பிரயாணித்தன. திடீரென ஒன்று மட்டும் சென்ற வழியே திரும்பி விட்டது. காரை பிரேக் செய்ய முடியவில்லை. காரில் அடிபட்டு நாய் தூக்கியெறியப்பட்டது. அடித்த வேகத்தில் நாய் குலைத்துக் கொண்டே தூர விழுந்து எழுந்து ஓடியது. என் காரின் நம்பர் பிளேட்டும், முன் விளக்கின் மேலுள்ள கண்ணாடியும் உடைந்து போனது.

கிழக்குக் கடற்கரைச் சாலையில் மட்டும் கிட்டத்தட்ட 100 நாய்களுக்கு மேல் உள்ளன. அந்தச் சாலையில் செல்லும் கார்களின் வேகமும் அதிகம்.

இந்த நாய்களுக்கென சரியான தீர்வு இல்லாவிட்டால் அதனால் பல விபத்துகள் உருவாகும்.

5:56 AM  
Blogger புலம்பல்ஸ் said...

பத்ரி, உங்க ட்ரைவர் டென்ஷன் ஆகாம நேரா ஓட்டியிருக்காரே.. பாராட்டத்தான் வேணும். இது சம்பந்தமா, கார்ப்பரேஷனுக்கோ, ஏதோ ஒரு அமைச்சருக்கோ ஒரு ஈமெயில் கொஞ்ச நா முன்னாடி அம்ச்சதா ஞாபகம். ஆனா ஒண்ணும் நடக்கல.

8:00 AM  
Blogger ராஜா said...

என் அனுபவம்:
http://raja.yarl.net/archives/001609.html

:(

8:19 AM  

Post a Comment

<< Home