Monday, June 28, 2004

சாராயமும், லாட்டரியும்.

கொஞ்ச நாள் முன்னாடி, தமிழக அரசு லாட்டரிய தடை பண்ணினாங்க. நல்ல விஷயம் தான். ஆனா அதுலயும் ஒரு கெடுதல் இருக்குன்னு அப்ப புரியலை. பல பேர் வேலை இழந்துட்டாங்க. கிண்டி ரயில்வேஸ்டேஷன் போனீங்கன்னா (அட.. இப்ப போயி என்னாவப்போவுது? ) முன்ன எப்பவாவது போயிருந்திருந்தீங்கன்னா.. பலர் லாட்டரி விக்கறத பாத்திருப்பீங்க. இதுல கண்பார்வை இல்லாதவங்க நிறைய இருப்பாங்க.

லாட்டரி சீட்ட மறுபடியும் கொண்டு வரணும்னு பலர் தமிழக அரசுக்கு கோரிக்கை வெச்சாங்க நேத்திக்கு.

எனக்கு இது மாதிரி விஷயங்கள்ள எப்பவுமே புரியாதது என்னன்னா.. நம்ம ஓட்டு போட்டு வந்த ஆட்சி தான். நம்ம அங்கீகரிச்சு தான் ஆட்சி பண்ணிட்டிருக்காங்க. ஆனாலும், அரசின் இந்த மாதிரி நடவடிக்கைகள்ள - பெரும்பான்மை மக்களுக்கு ஒப்புதல் இருக்கும்னு என்ன நிச்சயம்? அவங்க என்ன - "நாங்க ஆட்சிக்கு வந்தா லாட்டரிய ஒழிப்போம்"னு முன்னமேயே சொன்னாங்களான்ன? அப்டி இருக்கும்போதும், இது எப்டி ஜனனாயகம் ஆகும்?

அது ஒரு பக்கம் இருக்கட்டும். கொஞ்ச நாள் முன்னாடி சாராயக்கடைகள தமிழக அரசே எடுத்து நடத்த முடிவு பண்ணி, நடத்திக்கிட்டிருக்கு.

இதுல எனக்கு என்ன நெருடல்னா, தமிழக அரசுப்படி, சாராயம் தப்பில்லையாம். லாட்டரி ரொம்ப தப்பாம். இது எந்த ஊரு நியாயம்?
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home