Thursday, April 29, 2004

தண்ணி லாரி எனும் எமன்

-இன்றைய ஹிந்துவின்படி, இந்த வருடம் ஜனவரியிலிருந்து இன்று வரை, தண்ணி லாரிகளால் சென்னையில் மட்டும் கொல்லப்பட்டவர்கள் 16. காயமடைந்தவர்கள் 50.

- இன்று கோயம்பேடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நாகராஜ் மற்றும் க்ருஷ்ணகுமார் இருவரையும், அவ்வழியே சென்ற தண்ணி லாரி இடித்து; பின்பு அவர்கல் மீதேறி கொன்றது. லாரி ஓட்டுனர் பூங்காவனம் கைது செய்யப்பட்டார். (லாரியை அதிவேகமாகவும், தாறுமாறாகவும் ஒட்டியதால் இந்த விபத்து நேர்ந்ததாக போலீஸ் தெரிவித்தனர்).

சமீபத்திய பிற தண்ணி லாரி மரணங்கள்.

-- ஏப்ரல் 7 - வடபழனி பேருந்து நிலையம் அருகே ஒரு துப்புரவுத்தொழிலாளி தண்ணி லாரியால் இடித்து கொல்லப்பட்டார்.

-- ஜனவரி 13 - வடகொரியாவை சேர்ந்த ஒருவர் கோடம்பாக்கம் அருகே

-- மார்ச் - மேடவாக்கம் அருகே 35 வயது இளைஞர்.

புள்ளி விவரம்

-- சென்னையில் ஒரு நாளைக்கு 3000 தண்ணி லாரிகல் ஓடுகின்றன.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home