Tuesday, March 09, 2004

குடத்திலிருந்து, குன்றுக்கு.

இத எப்பிடி செய்யிறது? ஒரே மண்ட குடைச்சலா இருக்கு.

வேட்பாளர்களின் ஜாதகம். முன்ன சொன்னேன்லியா (1 2)? இத பெருவாரியான மக்களுக்கு எப்டி கிடைக்க செய்யிறது அப்டிங்கறது தான், இப்போ நம்ம கிட்ட பெரிய மண்ட குடைச்சலா இருக்கு.

இத பத்தி, சில யஹூ-க்ரூப் கள்ள குடைஞ்சி பாத்ததுல, பல பேர் இதப்பத்தி, யோசிச்சிக்கிட்டிருக்காங்கன்னு தெரியுது.

எலக்சன் கமிஷன் என்ன சொல்லிடிச்சி? "எங்க கிட்ட வேட்பாளர்கள் பத்தின தகவல் இருக்குது. உங்களுக்கு வேணுமின்னா வந்து வாங்கிக்கங்க. அவ்ளதான். சொல்லிப்புட்டோம்." அப்டின்னு சொல்லிடிச்சி.

இப்டி இருந்தா இது வேலைக்கு ஆவுமா? ஆவாது. எவ்வளவு பேர் இத எலக்சன் கமிஷன்ட போயி வாங்கிக்கப் போறாங்க?

இத நெனைக்கும் போது ஒரு பழமொழி ஞாபகத்துக்கு வருது. அது என்னன்னா, குடத்திலிட்ட விளக்குக்கும், குன்றிலிட்ட விளக்குக்கும் உள்ள வித்தியாசம். ஒரு விளக்கு இருக்கு. அது குடத்துக்குள்ள இருந்தா யாருக்கு என்னா பிரயோசனம்? அத மலைக்கு மேல வெச்சாத் தானே ஊருக்கு வெளிச்சம் தரும்? அது போல, நம்ம வேட்பாளர்கள் பத்தின விவரம் இருக்கு. ஆனா அது நம்ம ஜனங்களுக்கு போயி சேர்ந்தாத்தானே பிரயோசனம்?

கொஞ்ச காலத்துக்கு, இந்த வேலைய, தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள், NGO மற்றும் சமூக அக்கறை கொண்ட சில தனிப்பட்ட மனிதர்கள் இவங்க தான் செய்ய வேண்டி இருக்கும்னு நெனைக்கறேன்.

ஆனாலும், இந்த ஜாதகத்த பொது மக்களுக்கு வினியோகிக்க ஒரு 'Proven Mechanism' யாரும் கொண்டு வரலை. அல்லது என் கண்ணுக்கு அது இன்னும் தட்டுப் படலை. (உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்க.)

இதுக்கிடையில, இது சம்பந்தமா ரெண்டு டாக்குமெண்ட் படிக்க கெடச்சது. இங்க.

நான் இன்னும் முழுசா படிக்கலை. நீங்க படிங்க.

ஒரு presentation
தேர்தல் கமிஷனுக்கு ஒரு பெட்டிசன்
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home