Thursday, February 26, 2004

நஜ்மா உடைச்சா மண் குடம் ; ஜோகி உடைச்சா வெண்கலக்குடம்.

லஞ்ஜம் கொடுத்து மாட்டிக்கொண்ட முன்னாள் சட்டிஸ்கர்க் முதல்வர் அஜித் ஜோகியை மன்னித்து மறுபடியும் தேர்தல் பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைத்ததை படித்திருப்பீர்கள்.

இன்று அதே சோனியா காந்தி, நஜ்மா ஹெப்துல்லா சம்பந்தப்பட்ட சர்ச்சை குறித்து இப்படி சொல்லியிருக்கிறார் - "காங்கிரஸ் ஒரு லட்சியவாத இயக்கம். அந்த லட்சியத்தில் நம்பிக்கையில்லாதவர்கள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு அதில் இடம் இல்லை"

நஜ்மா ஹெப்துல்லா குறித்த சர்சசை என்னவென்று சரியாகத் தெரியவில்லை.
என்றாலும் , சோனியா சமயத்திற்க்கேற்றவாறு நடந்து கொள்கிறார்!!
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home