Monday, February 23, 2004

கலைஞர்களுக்கு எதுக்கு உதவித்தொகை?

நலிந்த கலைஞர்களுக்கு, தமிழக அரசு வாழ்நாள் உதவித்தொகை அளிக்கப்படுவது கண்டு மகிழ்ச்சியும் அதே சமயம் அதிர்ச்சியும் உற்றேன்.

மகிழ்ச்சி, அரசின் நல்லெண்ணத்திர்க்கு.

எனக்கிருக்கும் உறுத்தல் என்னவென்றால், நலிந்த கலைஞர்களுக்கு (நாடக, சினிமா) உதவி புரிய, ஏன் மக்களின் வரிப்பத்தை உபயோகிக்க வேண்டும் என்பது தான். அவர்கள் என்ன நாற்று நட்டார்களா? களை புடுங்கினார்களா? நாட்டின் எல்லைக் கோட்டில் உயிரை பணயம் வைத்து மக்களைக் காத்தார்களா? அல்லது ஏழை மக்கள் வாழ்வு முன்னேற, அவர்தம் நாட்களை அற்ப்பணித்தார்களா?

நாடக கலைஞர் , திரை கலைஞர் என்பது ஒருவரது தொழில். அவர்களும், டாக்டர் தொழிலாளி போல், கட்டட தொழிலாளி போல், ஒரு தொழிலாளி. மேற்சொன்ன துறையில் இருப்பவர்கள் நலிவுற்றால் அரசாங்கம் உதவி புரியுமோ? பின் ஏன் கலைஞர்களுக்கு மட்டும் இந்த பாரபட்சம்?

கலைகளை வளர்க்க வேண்டுமானால், அரசு நடத்தும் கலை விழாக்களில் அவர்களுக்கு வாய்ப்பளிக்கட்டும். வெளி மாநில மற்றும் வெளிநாட்டு கலை விழாக்களில் அவர்கள் பங்கேற்க்க ஆவன செய்யட்டும். அதை விட்டு விட்டு, உதவித்தொகை கொடுத்தால் என்ன புண்ணியம்? அதுவும் வாழ்நாள் முழுதும்? 500 பேருக்கு தலா மாதம் ரூ.500 வீதம் இது வருடத்துக்கு மட்டுமே 30 லட்சம்.

இது மக்கள் பணம். மக்களுக்கு இதில் உடன்பாடு உண்டோ? யாருக்கும் தெரியாது. அதை தெரிந்து கொள்ள நம் அரசியல் அமைப்பில் வ்ழி-வகை இல்லை. அமெரிக்காவில் 'ப்ராப்பஸிஷன்' என்கிறார்கள். ஒவ்வொரு முக்கிய தீர்மானத்திற்க்கும் ஒரு 'ப்ராப்'. மக்கள் ஓட்டளிக்கிறார்கள்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home