Thursday, October 13, 2005

ஹைதராபாத் சார்மினாரின் - அவல நிலை

சமீபத்தில் ஹைதராபாத் சார்மினாருக்கு சென்றிருந்தேன். அதன் அவல நிலை கண்டு ஆந்திர அரசாங்கம் மற்றும் சுற்றுலாத்துறைக்கு கீழ்க்கண்ட மின்னஞ்சலை அனுப்பினேன். பதிலொன்றும் இதுவரை இல்லை.


From: hari Mailed-By: gmail.com
Reply-To: hari
To: aptourism@hotmail.com, aptourism@rediffmail.com, aptdc@satyam.net.in, info@aptourism.com, cmap@ap.gov.in, cmap@ap.nic.in, drysr@ap.gov.in
Date: Oct 10, 2005 12:17 PM
Subject: Pathetic state of the Monument called Charminar.

Hi-

I would like to bring to your attention the pathetic state in which
the monument called Charminar, that we proudly call as a symbol of
Hyderabad - if not Andhra Pradesh - is being maintained.

I visited the Charminar yesterday for the first time and i was very
excited to visit it. I was very excited because, i will be shortly
visiting a centuries old monument that has stood the test of time.

My first impression was that, the sourrounding areas were very shabby
will all kinds of garbage thrown around by our indiciplined citizens
and no one to clean it.

I entered the arena paying Rs. 5 ( which i much regretted after the
visit ) to find the garbage gala continued even inside. ( though not
as much as outside ). Ice cream cups, empty water sachets and other
stuff thrown - without any respect to the great monument.

I took the flight of curling steps up - only to find that walls filled
with names of the previous visitors. They have carved their names on
the walls. There is no space left on the wall. No exaggeration. All
the walls are filled with names. Pathetic!!

People have spit pan, gutka or whatever in all the nook and corner
they can find.

I had no sense of being in the middle of history. I came down
immediately and left charminar totally ashamed.

I suggest the following.

-- Please provide enough garbage disposal buckets/cans outside the
charminar arena.

-- Please make sure people do NOT enter the arena with eatables.

-- Please make sure nobody enters the arena with gutka or any
chewables in their mouth.

-- Please make an honest effort to keep inside and outside the arena
as much clean as possible.

-- As people enter the charminar, please have somebody explain the
people, the greatness of the spot and the need to maintain it.

-- If possible, take an effort to rid the walls of the names and also
to clean the corners off the gutka/pan spits.

I would really appreciate it if you can take up some of the above efforts.
Please let me know how I can particiate in your cleaning efforts.

Thanks and Regards-
-Hari.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, June 14, 2005

புளிமூட்டைப் பேருந்துகள் - சென்னைகூட கொஞ்சம் பஸ்ஸுங்க வுட்டாத்தான் இன்னாவாம்? கொறஞ்சா போயிடுவீங்க?
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, June 11, 2005

'தகவல் அறியும் உரிமை மசோதா' மிகவும் சக்தி வாய்ந்தது.

'தகவல் அறியும் உரிமை மசோதா' மிகவும் சக்தி வாய்ந்தது. அது, சாதாரண மக்களுக்கு, ஜனநாயகத்தில் பங்கேற்பதற்கும், பங்களிப்பதற்கும் சிறந்த வாய்ப்பளிக்கிறது. அதன் வீச்சை சமீப காலம் வரை அறியாமல் தானிருந்தேன். ஆனால், சில வலைத்தளங்களை பார்வையிட்ட போது, அது புரிந்து விட்டது. பரிவர்தன் அதில் ஒன்று.

RTI என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த மசோதாவிற்கேவான அமைப்பு இது. இதன் சக்தியை மக்களுக்குப் புரிய வைப்பதற்கும், சாதாரண மக்கள் தங்கள் அன்றாட பிரச்சனைகளை RTI மூலம் எப்படி தீர்த்துக் கொள்ள முடியும் என்று அறிவுறுத்துவதற்காகவும் இவர்கள் பாடுபடுகிறார்கள்.

உதாரணமாக, உங்கள் தெருவில் தெருவிளக்கு எரியவில்லை என்று வைத்துக் கொள்வோம். ஒரு கம்ப்ளயின்ட் கொடுக்கலாம்.. 'தகவல் அறியும் உரிமை மசோதா' எப்படி இதற்கு உதவும் என்று நாம் நினைக்கலாம். ஆனால், சரியான கேள்வியைக் கேட்பதன் மூலம், சரியான தகவல்களைத் தரச் சொல்வதன் மூலம், இது போன்ற சிறு-சிறு பிரச்சனைகளைக் கூட RTI மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்கிறார்கள் இவர்கள். அது பற்றி மற்றொரு பதிவில்.

==

RTI யினால் எந்த மாதிரியான தகவல்கள் பெற முடியும் என்ற ஐயம் உங்களுக்கு இருந்தால், மேலும் படியுங்கள்.

ஒரு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருக்கு வருடம் ஒன்றுக்கு 2 கோடி ஒதுக்கப்படுகிறது. அவரின் தொகுதி மேம்பாட்டிற்கு. எல்லா எம்.எல்.ஏ.க்களும் இந்தப் பணத்தை முழுவதுமாகச் செலவழித்து விடுவதில்லை. பலர் உறுப்படியாகச் செலவழிப்பதில்லை.
பலர் செலவு ஆரம்பிப்பதே இல்லை.

உங்கள் தொகுதி எம்.எல்.ஏ. இதில் எந்தக் கட்சி என்று அறிந்து கொள்ள RTI உதவும். ஆமாம். இந்த 2 கோடியில், எவ்வளவு செலவு செய்யப்பட்டிருக்கிறது? எதற்கெல்லாம்? இன்னும் எவ்வளவு மிச்சமிருக்கிறது? போன்ற எல்லாத் தகவல்களையும், ஒரு RTI போட்டு கறந்து விடலாம். நம்பமுடிகிறது?

சரி. இதற்கு எவ்வளவு செலவாகும்?

தமிழகத்தில் ஒரு நயாப் பைசா செலவழியாது. இலவசம். தகவல் அறியும் 'உரிமை' அல்லவா இது? ஆனால், சில மாநிலங்களில் கட்டணம் உண்டு. (இந்தியாவிலேயே, தகவல் அரியும் உரிமை மசோதாவை இயற்றிய முதல் மாநிலம் என்பதும், எந்த அமைப்பின் தூண்டுதலும் இல்லாமல், தமிழக அரசே முன்வந்து இயற்றிய மசோதா இதுவென்பதும் உபரி தகவல்.)

====
இந்த விண்ணப்பத்தை யாரிடம் அளிப்பது?

நகர மேம்பாட்டுத் துறை அலுவலகம். (அதாவது, எம்.எல்.ஏ. நிதிக்கு - நிதி ஒதுக்க எந்த அமைச்சகம் பொறுப்போ, அந்த அமைச்சகத்தின் அலுவலகம்.)

தகவல் எவ்வளவு நாளில் கிடைக்கும்?

ஒரு மாதத்திற்குள் தந்தாக வேண்டும். இல்லையென்றால் மேலதிகாரியிடம் செல்லலாம். (சில மாநிலங்களில், ஒரு மாதத்தில் தகவல் வரவில்லையென்றால், சம்பந்தப்பட்ட அதிகாரியின் சம்பளத்திலிருந்து பிடித்தம் இருக்கிறது. தமிழகத்தில், இதற்கு வழி இல்லை.)

1. இதற்குண்டான விண்ணப்பம், இங்கு இருக்கிறது. தமிழில். (பக்கத்தின் இறுதியில் பார்க்கவும்.)

2. எம்.எல்.ஏ. நிதி சம்பந்தமான கேள்வி இங்கு இருக்கிறது. (அதை முடிந்தவரை தமிழ்ப்படுத்தி கீழே கொடுத்திருக்கிறேன். மொழி பெயற்ப்பு சரி இல்லையென்றால், உங்கள் கருத்துக்களைத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.)

மேற்சொன்ன இரண்டையும் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.

___________________________________________________________________________________
அன்புடையீர்,

சட்டமன்றத் தொகுதி உறுப்பினர், தொகுதி மேம்பாட்டுத் நிதியிலிருந்து, நிதி வருடம் 2004 ல் தொகுதி எண் _______ ற்கு ஆற்றப்பட்ட பணிகளின் கீழ்க்கண்ட விவரங்களைத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்:

பணியின் பெயர்
பணி குறித்து சிறிது விவரம்
ஒதுக்கப்பட்ட தொகை
தொகை ஒதுக்கப்பட்ட தேதி
பணியின் இன்றைய நிலவரம்
பணிக்கு அமர்த்தப்பட்ட ஏஜென்சி
வேலை ஆரம்ப தேதி
வேலை முடிவு தேதி
வேலை வழங்கப்பட்ட தவணைகள்
அளிக்கப்பட்ட தொகை

இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் இந்த சட்டமன்ற உறுப்பினரின் நிதியில் எவ்வளவு தொகை இருந்தது?

இந்த நிதிக்கு நடப்பு நிதியாண்டில் உறுப்பினருக்கு எவ்வளவு தொகை வழங்கப்பட்டது?

மேற்ச்சொன்ன மொத்த தொகையிலிருந்து, மேம்பாட்டுப் பணிகளுக்கு எவ்வளவு பணம் இதுவரை ஒதுக்கப்பட்டிருக்கிறது?

நிதி ஒதுக்கலுக்கு காத்திருக்கும் பணிகளின் மொத்த நிதித் தேவை?

___________________________________________________________________________________

இந்தத் தகவல் எதற்கு பயன்படும்?

சட்டமன்றத் தேர்தல் வருகிறது. உங்கள் தொகுதி எம்.எல்.ஏ. யின் பணிகளை சீர் தூக்கிப் பார்க்க இது உதவும்.
உங்கள் பகுதியில், ஏதாவது வேலை நடைபெற வேண்டுமென்றால், உங்கள் எம்.எல்.ஏ. சாக்குப்-போக்கு சொல்லாமல் கிடுக்கிப்பிடி போட இது உதவும்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தகவல் பெற்று, அதை உங்கள் பகுதி மக்களிடம் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, June 10, 2005

மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்தல் தவறா?

நாம், நாம் குடியிருக்கும் இடத்தை, சுற்றுப்புறத்தை, வேலை பார்க்கும் இடம் ஆகியவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதே போல் மாணவர்கள் தங்கள் வகுப்பறையை, அதன் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதே போல், கழிப்பறையையும்.

பள்ளிக்கூடங்களில் பொதுவாக சுற்றுப் புறத்தையும், கழிப்பறையும் சுத்தப்படுத்த ஆயா என்றழைக்கப்படும் பணிப்பெண்களை வேலைக்கு வைத்திருப்பர். ஆனால், மாணவர்கள் தாங்கள் உபயோகிக்கும் கழிப்பறையை தாங்களே சுத்தம் செய்கிறார்கள் என்றால், அது மிகவும் சிறப்பு.

இந்த வேலையைத் தான் செய்யப் பணிக்கப் பட்டனர் - ஈரோடு கணபதிபாளையம் பஞ்சாயத்து தொடக்கப் பள்ளி மாணவர்கள்.

'நல்ல விஷயம் தானே' என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால், கலெக்டர், தலைமை ஆசிரியையும், விஜயலட்சுமி என்ற டீச்சரையும், தற்காலிக பணி நீக்கம் செய்து விட்டார்.

அந்தப் பள்ளியில், இது நடைமுறையில் இருக்கும் பழக்கம் தானாம். இன்று இருவர், நாளை இன்னொறு இருவர் - என்று, ஒவ்வொரு நாளும் கழிப்பறை மாணக்கர்களால் சுத்தம் செய்யப்படும்.

ஒரு விஷயம். அன்று வகுப்பில் பாடம் நடந்து கொண்டிருக்கும் போதே, மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய விஜயலட்சுமி டீச்சை பணித்திருக்கிறார். இது கண்டிக்கப் பட வேண்டியது தான். ஆனால், இதற்காக டீச்சர்கள் பணி நீக்கம் செய்யப்படுதல் கொஞ்சம் ஓவர். அதற்கு மாறாக, இந்த முறையை ஒழுங்கு படுத்தி, சிறப்பாக நடைமுறைப் படுத்தியிருக்கலாம்.

"இது போல் ஏதாவது பள்ளியில், மாணவர்களை வருப்பறையை சுத்தம் செய்யச் சொன்னதாகத் தெரிந்தால், தலைமை ஆசிரியையும், டீச்சரும் நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்" - இது கலெக்டரின் கண்டிப்பு.

//The Collector warned school teachers not to entrust any work to students, especially cleaning classrooms and collecting water. In case of any such complaint, the concerned teacher and the headmaster or headmistress of the school would be dismissed.//

அபத்தம்!!நன்றி - ஹிண்டு
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, June 08, 2005

சென்னையில்......இன்று

புதுப்பிக்கப் பட்டிருக்கும் பொது மருத்துவமனை.

-- 104 கோடி செலவில் ஆறு மாடி கட்டடம்.
-- கண்காணிப்பு கேமிராக்கள்.
-- 16 அறுவை சிகிச்சை அறைகள்.
-- சர்வதேசத் தர உபகரணங்கள்.
-- குளிரூட்டப் பட்ட வார்ட்கள்.
-- முழுக்க கணினி மயமாக்கப் பட்டது.

இந்த மாற்றங்களுடன், ஏழை எளிய மக்களுக்கு சிறப்பாக சேவையும் புரியும் என்று நம்புவோம். (ஏழை, எளியோர் அல்லாதோர் பொது மருத்துவமனையை உபயோகிப்பதில்லை தானே? )

அவசரத்திற்கு இல்லாவிட்டாலும், வருடத்திற்கு ஒரு முறையேனும் நடுத்தர, மேல்த்தர வர்க்கமும் இங்கு செல்வது அவசியம் என்று நினைக்கிறேன். ஒரு கண்காணிப்பு நோக்கத்திலாவது.. நம் சக மெஜாரிட்டி குடிமக்கள் உபயோகிக்கும் மருத்துவமனை அல்லவா?

=====================================================================

சென்னையில் தனியார் குட்டிப் பேருந்துகள்.

இந்தச் செய்தி சென்னைவாசிகளுக்கு கண்டிப்பாக மிகவும் மகிழ்ச்சியளிக்கும்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, June 03, 2005

தீம் பார்க்கள்

உலகின் தலைசிறந்த தீம் பார்க்கள் - Forbes இங்கு வரிசைப் படுத்தியிருக்கிறது. (ரீடிஃப் செய்தித் துண்டு)

இந்தியாவில் நான் முதன் முதலில் சென்ற தீம் பார்க், "விஜிபி தங்கக் கடற்கரை". குறைந்தது பத்து வருடங்களுக்கு முன். நீளமான தோசை தின்றதும், கூட வந்த ஏதோ ஒரு அரை டிக்கெட்டைக் காணாமல் தேடியதும் ஞாபகமிருக்கிறது. வேறொன்றும் தெளிவாக நினைவில் இல்லை.

ஐந்தாறு வருடங்களுக்கு முன் "கிஷ்கிந்தா". வேலை இடத்திலிருந்து கூட்டிச் சென்றார்கள். கூட்டமாக இரண்டு வேன்களில் சென்றோம். நிறைய ரைட்ஸ்கள். நல்ல அனுபவமாக இருந்தது.

நான் என் குடும்பத்தார் மூல கேள்விப் பட்ட வரை, கேரளாவில் எங்கோ, "வீகா லாண்ட்" என்று ஒரு தீம் பார்க். மிகச் சிறப்பாக இருக்கிறதாம்.

நீங்கள், இந்தியாவில், அல்லது வேறு நாடுகளில் எந்தெந்த தீம் பார்க்களுக்குச் சென்று இருக்கிறீர்கள்? உங்கள் அனுபவம் எப்படி? பகிர்ந்து கொள்ளுங்களேன்..
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, May 29, 2005

அகராதி.com ??

"Dictionary.com" அப்டீன்னு ஒரு வலைத்தளம் இருக்குது. நான் அடிக்கடி விஸிட் செய்யும் ஒரு தளம். வலையில் ஏதேனும் படித்துக் கொண்டிருக்கும் பொழுது, அர்த்தம் புரியாத வார்த்தைகளுக்கு உடனடியாக அர்த்தம் புரிந்துகொள்ள மிகவும் கையகமாக (handy) இருக்கும் தளம்.

இந்தத் தளத்திலிருந்து தினமும் எனக்கொரு மின்னஞ்சல் வருகிறது. அதாவது, "Word of the Day".

தினம் ஒரு வார்த்தை, அதன் அர்த்தம், அதை உபயோகிக்கும் முறைக்கு இரண்டு அல்லது மூன்று உதாரணங்கள், வார்த்தையின் ரிஷி-மூலம்.

எல்லா வார்த்தைகளும் மனதில் பதிந்து விடும் என்பதல்ல; என்னளவில், பத்தில் ஒன்று பதிந்தாலே போதும் தான்.

இது போல், தமிழில் ஏதேனும் ஒரு சேவை இருந்தால், சிறப்பாக இருக்கும். அதாவது, ஆங்கில வார்த்தைகள் குறைவாக பயன்படுத்த வேண்டும். அதற்கு ஈடான தமிழ் வார்த்தைகள் இருக்கின்றன என்று கூறுபவர்கள், புதிய கலைச் சொற்க்கள் போன்றவற்றை புழக்கத்தில் விட இது ஒரு நல்ல வழியாக இருக்கும்.

==

Subscribe க்கு தமிழ் வார்த்தை என்ன? Guidance க்கு தமிழ் வார்த்தை என்ன? சில சொற்களுக்கு, தமிழில் வார்த்தை சிந்திக்கும் போது, i just draw a blank.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.